பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கி. வா. ஜ. பேசுகிறார்

பாளையம் ஸ்ம்ஸ்தான வித்துவானாகவே விளங்கினார். திருவிடைமருதுாரில் அவர் இருந்த காலத்தில், நந்தன் சரித் திரக் கீர்த்தனையை இயற்றிய கோபாலகிருஷ்ணபாரதியார். அவரிடம் சில காலம் சங்கீதப் பயிற்சி பெற்றாராம்.

, ஒரு சமயம் கிருஷ்ணையர் திருவையாற்றுக்குச் சென் றார். அங்கே பூரீ தியாகையரவர்கள் ராம பஜனை செய்து கொண்டும், பல புதிய கீர்த்தனங்களை இயற்றிக்கொண்டும் வாழ்ந்திருந்தார். கனம் கிருஷ்ணையர் அவர்பாற் சென்று. வணங்கி அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றார். அப் பெரியாருடைய விருப்பப்படியே, 'கம்மா சும்மா வருகுமா சுகம்' என்னும் அடாணா ராகக் கீர்த்தனத்தைப் பாடிக் காட்டினார்.

உடையார்பாளையம் ஸ்ம்ஸ்தானாதிபதியாகிய கச்.இ. ரங்கர் கனம் கிருஷ்ணையரை மிகவும் அன்போடு ஆதரித்து அவருடைய மனம் கோணாதபடி நடந்து வந்தார். கச்சிரங்க குடைய அன்பிலே ஈடுபட்ட கிருஷ்ணையர் வேறு எங்கும் செல்லாமல் அவ்விடத்திலேயே இருக்கலாயினர்.

உடையார் பாளையத்திற்கு அப்பொழுதப்பொழுது - ஒல சங்கீத வித்துவான்கள் வருவதுண்டு. அவர்கள் கனம் கிருஷ்ணையரை முன்னிட்டுக்கொண்டு தங்கள் சங்கீதத்தால், வல்ம்ஸ்தானாதிபதியை உவப்பித்துச் சம்மானம் பெற்றுக் செல்வார்கள். கிருஷ்ணையர் சிறிதும் பொறாமையின்றி. அவர்களுக்கு வேண்டிய உதவிகளைப் புரிவார். இங்ங்ணம். வரும் வித்துவான்களிற் பலர் கிருஷ்ணையருடைய தனிச், இறப்புள்ள கனமார்க்க சங்கீதத்தின் பெருமையை அறிந்து வியப்பார்கள். இத்தகைய வித்துவான் இந்தக் காட்டுப் பிரதேசத்தில் இருக்கிறாரே. பெரிய ஸ்ம்ஸ்தானங்களில், இருந்தால் இவர் எவ்வளவு சிறந்த நிலையில் விளங்கலாம்: என்று எண்ணுவார்கள். இந்தக் கருத்தை ஒரு முறை. கிருஷ்ணையரிடம் தெரிவித்தபோது, "வாஸ்தவந்தான், வேறு பெரிய இடங்களில் இருந்தால் என்னுடைய பதவி,