பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் உ. வே. சாமிநாதையர் I 67

பெரும்பாலானவை பதங்கள். நாயக நாயகி பாவத்தை அமைத்துப் பாடிய அவை மிகவும் பொருத்தமாக அமைந் துள்ளன. தமிழ்க் கீர்த்தனங்களைப் பாட வேண்டுமென்ற உணர்ச்சியுள்ளவர்கள் அவற்றைப் பயின்று அடிக்கடி பாட வேண்டியது அவசியம், சிறந்த சங்கீத சாகித்திய வித்து வானாகிய அவருடைய பெயரும் புகழும் இந்த நாட்டிலே

நிலைத்திருக்கச் செய்வதற்கு அதுதான் வழியாகும்.

டாக்டர் உ. வே. சாமிநாதையர்

பழைய காலத்தில் சிறு வகுப்புகளில் உலகநீதி, நல்வழி, வாக்குண்டாம் முதலிய நீதிநூல்களைக் கற்றுக் கொடுப்பார்கள். கிரமமாகக் காப்பு ச் செய்யுளோடு பாடத்தை ஆரம்பிப்பது வழக்கம். நல்வழியை ஆரம்பிக்கும் போது அதன் காப்புச் செய்யுளாகிய விநாயக வணக்கத் தைப் பிள்ளைகள் படிப்பார்கள்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தாமணியே நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா - என்று அந்தக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்வார்கள், நாலு பண்டங்களை விநாயகருக்குக் கொடுத்துவிட்டு மூன்று தமிழ்களைக் கேட்பார்கள். விநாயகர் தம்முடைய பங்கிலே லாபம் இருப்பதை எண்ணிச் சங்கத் தமிழ் தந்து விடுவார் என்ற ஞாபகமோ என்னவோ! அது கிடக்கட்டும். விநாயகரிடம் சிறு வகுப்பிலேயே சங்கத் தமிழ் வேண்டு மென்று செய்துகொள்ளும் இந்தப் பிரார்த்தனை, தலை முறை தலைமுறையாகத் தமிழ் நாட்டில் நடந்து வருகிறது.