பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கி. வா. ஜ. பேசுகிறார்.

இந்தப் பிரார்த்தனை சில காலம் நிறைவேறாமலே இ ரு ந் த து. நம்முடைய பாட்டனார் காலத்திலும் அவருடைய தகப்பனார் காலத்திலும் சங்கத் தமிழ் வேண்டு மென்று கரிமுகக் கடவுளைப் பிரார்த்திக்கும் பிரார்த் தனைக்குக் குறைவில்லை. ஆயினும் சங்கத் தமிழ் இருந்த இடந்தான் தெரியவில்லை. கிட்டத்தட்ட நூறு வருஷம் இந்தப் பிரார்த்தனை அர்த்தமில்லாத சம்பிரதாயமான வணக்கமாகவே இருந்தது. மறுபடியும் அதற்குப் பிரயோ சனம் கிடைத்தது. இப்பொழுதோ இந்தப் பிரார்த்தனை பூரணமான பலனைக் கொடுத்திருக்கிறது.

இதற்குக் காரணம் துங்கக் கரிமுகத்துத் தூமணி அல்ல; மகாமகோபாத்தியாய தாகூவினாத்ய கலாநிதி திராவிட வித்யாபூஷணம் மகா வித்வான் டாக்டர் உத்தமதானபுரம் வே. சாமிநாதையரவர்களே. ஆம் இந்தப் பெரியார் தாம் இளமையில் படித்தறியாத சங்க நூல்களைத் தேடி எடுத்து ஆராய்ந்து பதிப்பிக்கக் தொடங்கியமையால்தான் தமிழ் சங்கத் தமிழாக விளங்கலாயிற்று. கம்ப ராமாயணம், பெரிய புராணம், குறள், புராணங்கள், பிரபந்தங்கள் என்ற: அளவிலே எல்லைகொண்டு நின்ற தமிழ் உலகம் விரிந்தது. சங்கமலி செந்தமிழ் என்று புலவரெல்லாம் பாராட்டும் தமிழை யாவரும் உணரும் வாய்ப்பு உண்டாயிற்று.

தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள உத்தமதானபுரமென்னும் ஊர் இந்த உத்தமரைத் தமிழுலகுக்குத் தந்து தன் பெயரைப் பெருமைப்படுத்திக் கொண்டது. 1855-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி வேங்கடசுப்பைய. ரென்னும் சங்கீத வித்துவானுக்கும் ஸரஸ்வதியம்மா ளென்னும் பெண்மணியாருக்கும் குமாரராக உதித்தவர் சாமிநாதையர். அந்தக் கால முறைப்படி கல்வி பயின்ற பிறகு திருவாவடுதுறை மடத்தில் ஆதீன வித்துவானாக விளங்கிய பெருங் கவிஞராகிய பூரீ மீனாட்சிசுந்தரம்