பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் உ. வே. சாமிநாதையர் 169

பிள்ளையவர்களைச் சார்ந்து பாடம் கேட்டார். பிறகு 1880-ஆம் வருஷம் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டி தராக அமர்ந்து மாணாக்கர்களுக்குத் தமிழ்ப் பாடம் சொல்லி வந்தார். கும்பகோணம் காலேஜிலிருந்து சென்னைக்கு வந்து பிரஸிடென்ஸி காலேஜில் தமிழாசிரிய ராகப் பல வருஷங்கள் இருந்து விளங்கினார். சில காலக் திற்குப் பிறகு சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் காலேஜில் பிரின்ஸிபாலாகச் சில வருஷங்கள் இருந்தார். இவர்பால் படித்த மாணாக்கர்களெல்லாம் இவரைத் தெய்வம்போலக் கொண்டாடினர். பாட புஸ்தகங்களிலுள்ள பாடத்தைப் படிப்பதோடு நின்றுவிடாமல் மாணாக்கர்கள் மேலும் மேலும் தமிழ் நூல்களைக் கற்கும் வண்ணம் இவர் தமிழில் சுவையுண்டாகச் செய்தார். காலேஜ்களிலும் தனியே வீட்டிலும் இவரிடம் பயின்று தமிழறிவிற் சிறந்தவர்கள் பலர். . .

கும்பகோணம் காலேஜில் வேலை பார்த்து வந்த காலத் தில் தமிழ் நூலாராய்ச்சியை இவர் தொடங்கினார். முதலில் தமிழ்ப் பெருங் காவியமாக சீவக சிந்தாமணியைப் பரிசோதித்து. வெளியிட்டார். 1887-ஆம் வருஷம் அதனை வெளியிட்டபோது இவருடைய பதிப்பைக் கண்டு அறிஞர்க ளெல்லாம் கொண்டாடினர்.

அடுத்த வருஷம் பத்துப் பாட்டை தசினார்க்கினியர் உரையோடு வெளியிட்டார். பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்று மூன்று வரிசை யாகச் சங்க நூல்களைப் பிரித்திருக்கிறார்கள். பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் இருந்த தமிழருடைய நிலையையும் கலையையும் நாகரிகத்தையும் வாழ்க்கை முறையையும் தெரிந்துகொள் வதற்கு முக்கியமான கருவிகள்; தமிழ் நாட்டுப் பழஞ் சரித்திரத்திற்குரிய அஸ்திவாரம் போன்றவை.