பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் உ. வே. சாமிநாதையர் 17 F

வையும் பொருட்படுத்தாமல் ஊரூராக வீடுவீடாகச் சென்று. இவர் ஏடு தேடிய வரலாறுகள் பல. சுவடிகளைத் தொகுத் துப் பொறுமையோடு ஆராய்ந்து உள்ளதை உள்ளவாறே. பதிப்புக்கும் குணம் இவரிடம் இருந்தது. அவசரப்பட்டுக் கொண்டு பொருள் செய்வதும், தம்முடைய கருத்தை நூல் களிற் புகுத்துவதும், மனம் போனபடி திருத்துவதும், வேண் டாதவற்றை விலக்கி வேண்டியவற்றைக் கொள்வதும் ஆகிய செயல்களை இவர் அறவே வெறுப்பவர் எழுத்தெழுத் தாகச் சோதித்து நூலாசிரியருடைய உள்ளத்தை உணர்ந்து மெல்ல மெல்ல விஷயங்களை ஆராய்ந்து செவ்வையாகத் தெரிந்த பிறகே ஒரு நூலை அச்சிடுவார். அதனால் இவரு டைய பதிப்புக்களைத் தமிழுலகத்தார் மிகப் பாராட்டுகின் றார்கள். ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உபயோகமாகக் கூடிய பல செய்திகளை அப்பதிப்பில் இணைத்து வெளியிடும் திறமை மிக்கவர் இவர். ஆராய்ச்சித் திறமையோடு கூடிய முகவுரையும் நூலாசிரியர் உரையாசிரியர் வரலாறுகளும் குறிப்புரையும் அரும்பத அகராதியும் இவர் பதிப்பு நூல்க ளெல்லாவற்றிலும் காணலாம். இவர் பதிப்பித்த நூல்களில் ஒன்றைமட்டும் ஆழ்ந்து ஒரு மாணாக்கன் படித்தாற்கூடப் பல நூற் கருத்துக்களையும் பல அரிய மரபுகளையும் தெரிந்து கொள்வான். இவர் அறிவு ஆழ்ந்திருந்தது; அகன்றும் இருந்தது. . . . . . . : .

தேடுவாரும் படிப்பாரும் இன்றிக் குற்றுயிரும் குலையு. யிருமாக இருந்த பழத்தமிழ் நூல்களை மாசுநீக்கிப் புதுக்கித் தந்த இப்பெரியார் காலத்திற்கேற்ற வசன இலக்கிய சிருஷ்டி யையும் ஏற்றுக்கொண்டார். இரண்டாயிர வருஷங்களுக்கு முன் வழங்கிய தமிழிலே பழகிய இவர் நான்காம் வகுப்பில் படிக்கும் மாணாக்கனுக்கும் விளங்கும்படி தெள்ளத்தெளிந்த நடையிலே எழுதியதைப் பார்த்த தமிழுலகம் ஆச்சரியத்தில் மூழ்கியது. ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு மனிதரை யும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஊன்றிக் கவனித்து அவற்.