பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 கி. வா. ஜ. பேசுகிறார்

றைப்பற்றிச் சிறு சிறு வாக்கியங்களால் தென்றல் தவழ்வது போல இனிமை உண்டாகும்படி எழுதும் இவருடைய எழுத்துக்குத் தனியே ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஏறக்குறைய இருநூறு தமிழ் நூல்களை அச்சிட்டுப் பாதுகாத்த இந்த மகாமகோபாத்தியாயர் எழுதிய வசனப்பகுதிகள் இருபது புஸ்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் மிகவும் சிறந்தது இவருடைய சுயசரித்திரம். 122 அத்தியாயங்களே வெளிவந்தது; முற்றுப்பெறவில்லை. ஆனாலும் சென்ற நூற்றாண்டிலிருந்த தமிழ்நாட்டின் நிலையையும் உபகாரி கள், புலவர்கள்,மடாதிபதிகள் முதலியவர்களுடைய இயல்பு களையும் புலப்படுத்தும் தமிழர் சரித்திரமாக அது விளங்கு கிறது. அதில் இந்தத் தாகதினாத்ய கலாநிதி ஒவ்வொரு நூலையும் அச்சிடுவதற்குத் தாம் பட்ட சிரமத்தை மனமுரு கும் முறையில் எடுத்துச் சொல்கிறார். தமிழ் வசன இலக்கி யத்தில் அந்தச் சரித்திரம் ஒரு பெரிய நிதி. .

தம் மு ைட ய ஆசிரியராகிய பூரீ மீன்ாட்சிசுந்தாம் பிள்ளையவர்களின் சரித்திரத்தை இவர் மிக விரிவாக எழுதி யிருக்கிறார். வேறு சில சரித்திரங்களையும் வெளியிட் டிருக்கிறார். இலக்கியத்திற் கண்ட செய்திகளையும் தாம் கண்டும் கேட்டும் தெரிந்த விஷயங்களையும் அழகுபட விரித்துரைக்கும் சாமர்த்தியம் இவர்பால் இருந்தது, அந்தத் துறையில் இவர் எழுதிய கட்டுரைகள் பல. ஆராய்ச்சித் துறையாக இருந்தாலும் எளிதிற் புலப்படும்படி எழுதுவதே இவருடைய போக்கு. பல இடங்களில் இவர் தம்முடைய சோற்களால் ந ம் மனக்கண்முன் ஒரு சித்திரத்தைத் தோன்றச் செய்து விடுகிறார். - - நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை இயற்றிய ரீ கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இப்பேரியார் இளமையில் சில காலம் இசை பயின்றார். பாரதியாரை முதல் முதலில் சந்தித்ததைச் சொல்கிறார் கேளுங்கள்: . -