பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் உ. வே. சாமிநாதையர் 175

'வ ந் த வ ர் கோபாலகிருஷ்ண பாரதியாரென்பதை அறிந்த நான் மிக்க வியப்பை அடைந்தேன். அவருடைய புகழையும் நந்தனார் சரித்திரத்தின் அழகையும் உணர்ந்து ஈடுபட்டிருந்த என் இளைய உள்ளத்துக்குப் பாரதியார் ஒர் அழகிய உருவத்தை உடையவராக இருப்பாரென்ற காரணம் இல்லாத தோற்றமொன்று இருந்து வந்தது. நான் கண்ட காட்சியோ அதற்கு நேர் விரோதமாக இருந்தது.

'அகலமான புறங்கால்களுக்குமேல் சூம்பின கால்கள்; பருத்த முழங்கால்கள்; தடித்த இடை முழங்காலுக்குமேல் வஸ்திரம்; கூனல் முதுகு; இறுகின கழுத்து: பெருத்தமுண் டொன்று முன்வந்திருக்கும் குரல்வளை, அந்தக் கழுத்தில் ஏகருத்திராட்சம்; மார்பில் வில்வஒட்டு வில்லையோடுள்ள ருத்ராட்ச கண்டி, பூனைக்கண்; குறுக்கே நீண்ட தலை: அதன்மேல் நாணற்பூவைப்போலப் பறந்துகொண்டிருக்கும் பத்து மயிர். இந்தக் கோலத்தோடு பாரதியார் இருப்பா ரென்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அத்தகைய உருவத்தினால் இவருடைய சங்கீதத்துக்கோ சிவபக்தி வைராக்கியத்துக்கோ இழுக்கு ஒரு சிறிதும் உண்டாக வில்லை. கோணலையுடைய வீணையிலிருந்தல்லவா இனிய இசை எழுதுகின்றது? ஜடமாகிற அதற்கே அவ்வளவு சக்தி இருக்கும்போது, ஈசுவர சக்தியினால் உண்டாகிய சாரீர வீணைக்கு எவ்வளவு கோணல் இருந்தால்தான் என்ன?" சங்ககாலத்துக் கவிதையின் இயல்பை இதோ எடுத்துக் காட்டுகிறார்:

'அக்காலத்துப் புலவர்களின் கவிதை இயற்கைத்தாயின் மடியில் தவழ்ந்து, தெய்விகக் காதலும் அறந்திறம்பா வீரத் திலும் விளையாடி, சமரஸ் நிலையில் வீற்றிருக்கின்றது. கவிஞர்களுடைய சிருஷ்டிகளில், அருவிகள் இடையறாத சங் கீதத்தோடு வீழ்வதும்,அதில் மகளிர் துளைந்து விளையாடி இன்புற்று மலர்களைப் பறித்துப் பாறையிலே குவித்து