பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩74 கி. வா. ஜ. பேசுகிறார்.

அழகு பார்ப்பதும், நாயகன் ஒருவன் வேட்டையாடிக் கொண்டு வருவதும், அவன் அம்மகளிர் கூட்டத்திலுள்ள நாயகி ஒருத்தியைக் காண்பதும், இருவர் கண்களாகிய மடை வழியாகப் பாய்ந்த அன்பு வெள்ளத்தில் இருவருள்ள மும் கலந்து கரைவதுமாகிய நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். 'ஏழை இடையன் வீட்டில் பந்தற்காலில் கட்டியிருக்கும் தழையை ஆட்டுக்குட்டி உண்பதும், கடற்கரையிள்ள வலை யர் தெருக்களில் முத்துக்களைக் கிளிஞ்சலுக்குள் இட்டுக் குரங்குகள் குழந்தைகளோடு சிலுகிலுப்பை விளையாடு வதும், இடையன் மாலைக்காலத்தில் தன்னுடைய புல்லாங் குழற் கீதத்தினால் பசுக்களையெல்லாம் ஒன்று கூட்டி வீட்டுக்கு வருகையில் வழியிலே மலர்ந்துள்ள முல்லைப் பூக்களைக் கொத்தோடு பறித்துத் தலையிற் செருகிக் களிப் பதுமாகிய காட்சிகளைக் காண்கிறோம்.நெடுநாட்களாகத் தீமூட்டப் படாமையால் காளான் முளைத்த அடுப்பும் ஒட்டைக் கூரையும் உள்ள வறுமை நிலையம் ஒரு பக்கம் சித்திரிக்கப்படுகின்றது. பல பண்டங்களை விற்கும் இடங்: களில், பகலில் கொடிகளாலும் இரவில் விளக்குகளாலும் பாஷை அறியாதவர்களும் அறிந்து கொள்ளும்படி இன்ன இன்ன பண்டங்கள் விற்கப்படும் என்பதைக் குறிப்பிக்கும் கடை வீதிகளிலும், அரண்மனைகளிலும் திருமகள் நடனம் புரியும் கோலம் ஒருபுறம் சித்திரிக்கப்படுகின்றது.”

இவருடைய ஹாஸ்யத்திற்குச் சில உதாரணங்கள்: 'வில்லைச் சேவகர்களே ஒரு தனி வகுப்பு. ஜனங்க ளுடைய ஆவலை அளந்து பார்த்துச் சமயத்தில் பி.கு: பண்ணுவதும், கல் நெஞ்சர்களையும் கலங்க வைப்பதும், எந்தச் சமயத்தில் மனிதர்களிடமிருந்து லாபம் பெறலா மென்பதை அறிந்து நடப்பதும் அவர்களுடைய தொழில் இரகசியங்கள். பள்ளிக்கூடத்துச் சேவகனைப் பரம சாது வென்று சொல்ல வேண்டும்; கலெக்டர் கச்சேரி, மற்ற