பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் உ. வே. சாமிநாதையர் 夏75。

ஆபீஸுகள், ஆஸ்பத்திரிகள் முதலிய இடங்களிலுள்ள வில்லைமாtய வீரர்கள் எல்லோர் கண்ணிலும் விரலை விட்டு ஆட்டி விடுவார்கள். ஆஸ்பத்திரியைத்தான் பார்க்க லாமே. அந்தப் பியூன்களுக்குப் பிரீதி செய்யாவிட்டால்: சாமான்யமாக ஆஸ்பத்திரிக் கோட்டைக்குள் நுழைய முடிகிறதா; எத்தனை கேள்விகளை அவர்கள் சரமாரி யாகப் போடுகிறார்கள்? எவ்வளவு சட்டம் பேசுகிறார்கள்? அந்தப் பார்வையிலேதான் எத்தனை கம்பீரம்! அவர்கள் கையில் அதிகமாக வேண்டாம், இரண்டனாவை ரகசிய மாக வைத்து அழுத்துங்கள்; அப்புறம் அவர்கள் உங்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல், அவர்கள் தயையை எதிர்பாராமல், ஆஸ்பத்திரியில் நுழைபவர் யாரும் இல்லை; யமன் ஒருவனுக்குத்தான் அந்தச் சுதந்திரம் உண்டு.” -

பிரஸிடென்னி காலேஜில் இவர் முதலில் வேலையை ஒப்புக்கொண்டபோது ஒரு பழைய மேஜை இவருக்கு அளிக் கப்பட்டதாம். அந்த மேஜையின் பிரபாவத்தைப் பற்றிப் பிரின்ஸிபாவிடம் இவர் சொன்னதைக் கேளுங்கள்:

"இங்கே செளகரியங்களுக்கு என்ன குறை? இதோ இந்த மேஜையைப் போல வேறொன்றை எங்கும் பார்க்க முடியாது. ஏறக்குறைய நூறு வருஷ சரித்திரத்திற்கு ச் சாட்சியாக இது விளங்குகிறது. அக் காலத்துப் பண்டிதர்கள் கற்பலகையையும் பலப்பங்களையும் உபயோகப்படுத்தி வந்தனரென்பதை இந்தப் பள்ளங்கள் தெரிவிக்கின்றன. இதனோடு பழ கி ய புலவர்களைப்பற்றிய செய்திகள் எனக்குத் தெரியும், அவர்களுடைய ஞாபகத்தை இம்மேஜை உண்டாக்குகிறது. இந்த நாற்காவியும் இதற்கேற்ற ஜோடி யென்றே தோற்றுகிறது. இந்த இரண்டினுடைய பெருமை. யையும் நான் மட்டும் அறிந்து மகிழ்வதுதான் ஒரு குறை. பலபேர் அறியும்படி ஒரு காட்சிச் சாலையில் இருந்தால் நன்றாக இருக்கும்."