பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

讚76 கி. வா. ஜ. பேசுகிறார்

இவர் வாழ்க்கையிலும் பேச்சிலும் எழுத்திலும் எளிய தடையையே உடையவராக விளங்கினார்; ஆயினும் பலபேர் சேர்ந்தும் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்தார். தம்முடைய 87-ஆம் ஆண்டில், 1942-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி தமிழ் உலகத்தினின்றும் .பிரிந்தார்.

தமிழ் உள்ளளவும் இவர் புகழ் நின்று நிலவும். இதைத் தான் சுப்பிரமணிய பாரதியார் சொல்கிறார்.

நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி

இன்பவகை நித்தந் துய்க்கும் கதியறியோம் என்றுமணம் வருந்தற்க

குடந்தை நகர்க் கலைஞர் கோவே பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்

காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்கு வாயே. இறவாத புகழுடைய நூல்களைத் தந்த இவர் இறந்தும் இறவாத வான்சுடர் மண்டலத்திலே ஒளிர்கிறாரென்பது உண்மையே அல்லவா?

ಇಡೀ ಊ#5)

மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதை ாயரவர்கள் தமிழிலே ஒரு புதிய யுகத்தைப் புகுத்தியவர்கள். தமிழ் இலக்கிய சரித்திரத்திலே அவர்கள் தமிழ்த் தொண்டு புரிந்த காலம் ஒரு தனிச் சகாப்தம் போன்றது. தமிழிலக்கி யத்தில் சங்க நூல்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுத் தமிழர்க ஆளுடைய உள்ளத்தில் ஊன்றத் தொடங்கிய இக்காலத்தைச்

சாமிநாத சகாப்தம் என்றே சொல்லி விடலாம்.