பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே எழுத்து I77。

ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து சத்திய சோதனை செய்வதற்கு அளவற்ற பொறுமை வேண்டும். வருஷக்கணக் காக ஏட்டுச் சுவடிகளில் ஏறியிருக்கிற புழுதியைத் தட்டிக் கொட்டிச் சுத்தம் செய்வது பெரிதல்ல; அந்த ஏட்டுச் சுவடி களில் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்’ என்றபடி அயர்ச்சியாலோ, அறியா மையிலோ புகுத்த பிழைகளெல்லாம் பிற்காலத்தில் கூலிக் குப் பிரதி பண்ணுவோரால் நித்தியத்துவத்தை அடைந்து விட்டன. அவற்றையெல்லாம் உணர்ந்து மாசு களைந்து உண்மை காண்பதற்குச் சாமான்ய ஆற்றல் போதாது. அதற்கென்று தனி உள்ளம், தனிக் கண் வேண்டும்.

பற்றற்ற உள்ளத்தோடு, உண்மையை உணர வேண்டும். என்ற ஒரே நோக்கத்தோடு, ஆராய்ச்சி செய்தமையால் 認出* ரவர்கள் பிறராலே செய்வதற்ககிய காரியங்களைச் செய்;. தார்கள். அமெரிக்காவைக் கொலம்பஸ் கண்டு பிடித்தா னென்று அவனைக் கொண் டா டு கிறோம். அந்தக் - கொலம்பஸ் அ ப் பொழுது கண்டு பிடிக்காவிட்டால்: அமெரிக்கா சமுத்திரத்தில் முழு கி ப் போய் விடாது. வேறொரு கொலம்பஸ் வந்து அதைக் கண்டுபிடித்திருப்பான். ஐயரவர்கள் கண் டு எடுத்துத் துலக்கி வெளியிட்ட இலக்கியச் செல்லமோ அத்தகையதன்று; மனித சமுதாயத் தினருக்கு லட்சியமே இல்லாத ராமபாணப் பூச்சிகள் பல புலவர்களைக் கொன்று கொண்டிருந்தன. கறையான்கள் பல இலக்கியச் செல்வங்களை மண்ணாக மாற்றிக் கொண்டி ருந்தன. அவற்றை இறவாமல் எடுத்துப் பாதுகாக்கும் திருத் தொண்டை ஐயரவர்கள் செய்திராவிட்டால் நாம் இது சாறும் இழந்த நூல்களுக்குக் கணக்கு வழக்கே இராது.

ஏடு தேடித் தொகுத்து ஆராயும் பண்பு ஜயரவர்களுக்கு, இளமை தொடங்கியே இருந்து வந்தது. அவர்கள் திரிரே புரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்.