பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 கி. வா. ஜ. பேசுகிறார்

வாழ்க்கையென்று நினைக்கும்படி வாழ்க்கையின் அகத்தும் புறத்தும் கவிதை படர்ந்து அங்குள்ள உணர்ச்சிகளையெல் லாம் கோத்துக்கொண்டு நின்றது. அந்தக் காலத்தில், தமிழ்க் கவிதையென்றால் எ ப் படி இருக்க வேண்டும் என்பதை ஒரு புலவர் சொல்லி இருக்கிறார். அவர் விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து இலக்கணம் கூறவில்லை. கவிதையைப் பற்றிச் சொல்லு கிறதையே கவிதையாக்கி விட்டார்.

என்ன சொல்லுகிறார்: ஓர் உபமானம் சொல்லிக் கவிதை இத்தகையது என்று சுருங்கச் சொல்வி விளங்க வைக் கிறார். மாலைக் காலத்தில் சலனமடைந்த மனசை நின்று கவனிக்கச் செய்ததே, அந்த மல்லிகைப்பூமாதிரி இருக்கிறது தமிழ்க் கவிதை என்று சொல்லுகிறார்.

சொல்என்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும் நல்இருந் தீந்தாது நாறுதலால்-மல்லிகையின் வண்டார் கமழ்தாமம் அன்றே! மலையாத தண்டாரான் கூடல் தமிழ்.

மல்லிகையின் வண்டு ஆர் கமழ்தாமம் அன்றே-வண்டு கள் மொய்த்துக்கொள்ளும் மல்லிகையின் நறுமண மாலை அல்லவா? எது? தமிழ். எந்தத் தமிழ்? பழைய காலத்தில் தமிழுக்குச் சிங்காசனம் தந்து வளர்த்து வந்த அரசர்கள் எவ்வளவோ பேர் இருந்தாலும், பாண்டியர்களுக்குத்தான் அப்படி வளர்த்ததில் முதல் இடம். சங்கம் வைத்து வளர்த்த வர்கள் பாண்டிய அரசர்கள். அதனால் பாண்டி நாட்டைத் தான் அக்காலத்தில் தமிழ்நாடு என்று சிறப்பித்துச் சொல் வார்கள். அந்தப் பாண்டியருடைய நகரம் மதுரை. அங்கே தான் புலவர்களுடைய சபையாகிய சங்கம் இருந்தது. மதுரைக்குக் கூடல் என்றும் ஒரு பெயர் உண்டு. அந்தக் கூடலிலே வளர்ந்த தமிழ் என்கிறார் புலவர்.