பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லிகை மாலை 17.

பாண்டியனைப்பற்றிப் புலவர் சொல்கிறது நயமாக இருக்கிறது. அவனுடைய ஊரில் தமிழாகிய மல்லிகை மாலை இருக்கிறது. மற்ற ஊரிலிருந்து வந்தவர்கள் மணம் நுகர்ந்து அதைப் பாராட்டி அணிந்து கொள்கிறார்கள். அவன் அணிந்துகொண்டிருக்கிற வாஸ்தவமான் மாலை, எப்படிப் பட்டது தெரியுமா? அதை வேறு யாரும் அணிந்து கொள்ளமாட்டார்கள்.மலையாத தண்தாரான்-வேறுயாரும் போட்டுக் கொள்ளாத குளிர்ந்த மாலையை உடையவன் என்று வருணிக்கிறார் புலவர். அந்த மாலை இன்னது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதுதான் வேப்பம்பூ, ! (aba חסu

பாண்டியன் வேறு யாரும் அணிய விரும்பாத வேப்பம் பூ மாலையைத் தரித்திருந்தாலும் அவனுடைய ஊரிலே தான் நல்ல சரக்கு இருக்கிறது. மலையாத தண்தாரா னுடைய கூடலிலே தமிழ் இருக்கிறது. தமிழ்என்பது என்ன? மல்லிகையின் வண்டு ஆர் கமழ் தாமம் அது. ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு மூ க் கு உபயோகப்படாவிட்டாலும் வாசனையை அறியும் நிபுணர்கள்(Specialists)இருக்கிறார் கள், இதில் நறுமணம் இருக்கிறதென்று தெரிவிக்க. அந்த நிபுணர்களாகிய, அல்லது நம்மைக்காட்டிலும் மணம் அறிவதில் ரசிகர்களாகிய, வண்டுகள் நமக்கு முன்னே அந்த மல்லிகையின் மணம் கமழும் தாமத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆகையால்தான் கவி வண்டு ஆர் கமழ் தாமம் அன்றே என்று சொல்கிறார்.

மல்லிகை மாலைக்குப் பக்கத்தில் வந்து விட்டோம். நம்மைக் கண்டவுடன் பரமரசிகர்களாகிய மதுரங்கள் நம்: மிடத்திலே உள்ள கருணையினால் நமக்கு இடம்கொடுத்துப் போய்விட்டன. இப்போது இந்தச் சிறிய மலரின் மகத்துவம்: இது கமழ்கிறதே இந்தக் கவர்ச்சி வாய்ந்த சக்தி , எப்படி வந்தது என்று சோதனை போடலாமா? மலரைப்