பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 8 கி. வா. ஜ. பேசுகிறார்

பிய்த்து விட வேண்டாம். இதை இருக்கிறபடியே வைத்துப் பார்க்கலாம். கவி சொல்லுகிறாரே அதைக் கேட்கலாம்.

மல்லிகைப் பூவில் மெல்லிய இதழ்களெல்லாம் சேர்ந்த எளிய உருவம் இருக்கிறது. வர்ணம் சுத்த வெள்ளை. அதை வர்ண மென்று சொல்வதுகூடச் சரியல்ல. பார்க்கும்போது அந்த மலரின் உருவம் கண்ணில் பட்டாலும் நிறம் மனசில் படுவதில்லை. ஆனாலும் எல்லாவற்றிற்கும் மேலாக மல்லி ஆகயை மல்விகையாகவும் மலராகவும் நம் மனசைக் கவர்வ தாகவும் செய்வது எது தெரியுமா? அதன் நறுமணம். மல்லி கையின் மகரந்தம் சின்னஞ் சிறிய இடத்துக்குள் அடங்கிக் கிடந்தாலும் அதன் நறுமணம் எங்கும் பரந்து இனிமை ஊட்டுகிறது.

தமிழும் இத்தகையதுதான். தமிழ்க் கவிதையில் சொல் பொருள், அலங்காரம் என்று மூன்று இருக்கின்றன. சொல் அல்லது வார்த்தைதான் இதழ்கள்; அலங்காரம் வர்ணம்; பொருள்தான் நறுமணம். மல்லிகை மலரில் மணத்தைத் தாங்கிக்கொள்வதற்காக மாத்திரம் மெல்லிய வெள்ளிய இதழ்கள் இருக்கின்றன. கரடு முரடாக இல்லாமல் உள்ள இந்த மலருக்குள்ளே எங்கும் பரவும் மணம் தங்கியிருக்கிறது. மனத்தை நாம் நுகரும்போது மலரின் உருவத்தையும் நிறத் தையும் மறந்துபோய்விடுகிறோம். மல்லிகையின் வாசனை டில் மனசைப் பறிகொடுத்து நிற்கிறோம்; நம்மையே நாம் மறக்கும் நிலை வந்துவிடுகிறது. கவிதையிலும், சொற்க எாகிய இதழ்களும் அவற்றின் கட்டுக்கோப்பாகிய உருவ மும் அலங்காரங்களாகிய வர்ணங்களும்தலைமையுடையன அல்ல; பொருள்தான்; அது சுருங்கிய உருவத்திலே அமைந் திருந்தாலும் அதன் பெருமை நினைக்க நினைக்க விரிந்து கொடுத்து இன்பத்தைத் தரவல்லது.

இப்போது கவிஞனுடைய வார்த்தைகளை மறுபடியும் .கவனிக்கலாம்.