பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லிகை மாலை 19

சொல் என்னும் பூம்போது தோற்றி-சொற்களாகிய மெல்லிய பூவென்னும் உருவத்தைத் தோன்றச் செய்து, பொருள் என்னும் நல் இருந் தீந்தாது நாறுதலால்-கவியின் கருத்தாகிய நல்ல பெரிய இனிமையான மகரந்தம் வாசனை விசுவதனால், மல்லிகையின் வண்டு ஆர் கமழ் தாமம் அன்றே, மலையாத தண்தாரான் கூடல் தமிழ்-மல்லிகை மாலையைப் போன்றது பாண்டியனுக்குரிய மதுரையிலே வளர்ந்த தமிழ்.

இதுதான் அன்று, இரண்டாயிர வழுஷங்களுக்கு முன் தமிழர்கள் கவிதையைப்பற்றி எண்ணிய எண்ணம். எளிய மெல்லிய சொற்களாகி, உயர்ந்த இனிமையான ஆழ்ந்த கருத்துக்களைக்கொண்டு நிற்பது கவிதை என்பதே அவர் களுடைய கொள்கை

அக்காலத்துக் கவிதைகளில் பெரும்பாலானவை அகவற் பாட்டுக்கள். வசனத்துக்கு அடுத்தபடி நெருடு இல்லாமல் அமைந்தது அகவல். அந்தப் பாடல்களில் இயற்கைத் தேவி யின் அழகும், மனித உள்ளத்தின் துடிப்புக்களும் சொல்லப் கட்டன.

காலம் தன்னுடைய வேலையை நடத்திக்கொண்டே வந்தது. கவிதை செய்யுளாயிற்று. கட்டுப்பாடுகளும் கோணல்களும் கணக்கின்றிப் புகுந்து கொண்டன. யாப்பு நயங்களும், அலங்காரங்களும் செய்யுளை நிரப்பின. முழம் போட்டு அளப்பதைப் போல பாடல்களை அளந்து பார்த்து இயற்றினார்கள். கருத்தைக் காட்டிலும் சொல்லுக் கும் சொற்களின் கட்டுக்கோப்புக்கும் அலங்காரத்திற்கும் கெளரவம் உண்டாயிற்று. கம்பீரமான கங்காப் பிரவாக மாக இருந்த கவிதை போய், மூலைக்கு மூலை திரும்பித் தேங்கி வற்றியும் குழம்பியும் செல்லும் சிறு வாய்க்காலைப் போன்ற செய்யுள் உண்டாயிற்று. -