பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

疆&4 கி. வா. ஜ. பேசுகிறார்

னுக்கு அறுபதினாயிரம்பேர் மந்திரிமார்களென்றால், அது வும் அவர்கள் வேறுபாடான நோக்கம் கொண்டிருந்தவர் களானால், அரசனுக்கு அவர்களால் என்ன உபயோகம் உண்டாகப் போகிறது? ஆகவே அளவிலே அறுபதினாயிரர் என்று மலைக்க வேண்டாம். எல்லோரும் தசரதனுடைய நன்மையைக் கருதும் விஷயத்திலும் அரசியல் ஆலோசனை களிலும் ஒரே மாதிரியான சிரத்தை உடையவர்கள்; ஒன்று பட்ட நோக்கம் பெற்றவர்கள் என்று கம்பர் தெரிவிக் கிறார். தசரதர் நிர்வாக சபையில் எந்தக் காலத்திலும் 'ஏகமனசாகவே தீர்மானங்கள் நிறைவேறும் என்று இந்தக் காலத்து அரசியல் பாஷையிலே தாம் கொள்ளலாம்.

இத்தகைய சிறந்த பொருளைக் கொள்வதற்கு எனினும் என்ற பாடந்தான் ஏற்றதாக இருக்கிறது. னி என்ற ஓர் எழுத்து அங்கே இல்லாமல் 'ன்' என்று இருந்தாலும் இந்தச் சிறப்பு வருமா? -

ஐயரவர்கள் தம்முடைய வாழ்க்கையில் இவ்வாறு கண்டு பிடித்த பாடம் அனந்தம். அச்சிட்ட நூலாக இருந் தாலும் ஏட்டுச் சுவடிகளோடு ஒப்பிட்டுத் திருத்தி வைத்துக் கொள்ளும் இந்த அருமையான வழக்கத்தை அவர்கள் இறுதிக் காலம் வரையில் கைக்கொண்டிருந்தார்கள். பாட பேதங்களின் அருமை அவர்களுக்கல்லவா தெரியும்!

தமிழ்த் தாத்தாவும் காந்தித் தாத்தாவும் தம்முடைய வாழ்க்கை முழுவதையுமே சத்திய

சோதனையாக்கி அந்தச் சோதனையில் வெற்றி பெற்று - விளங்கும் பெரியார் மகாத்மா காந்தியவர்கள். தம்முடைய