பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தாத்தாவும் காந்தித் தாத்தாவும் 185

சுய சரித்திரத்திற்குச் சத்திய சோதனை' என்ற அழகிய பெயரையே வைத்திருக்கிறார். தமிழ் நாட்டில் தமிழிலக் கியப் புதையலை எடுத்துத் துப்புத் துலக்கி வெளியிட்டு இன்று சுவர்க்கவாசியாக விளங்கும் மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களும் சத்திய சோதனை செய்த திருக்கூட்டத்தாருள் ஒருவர். தம் வாழ்க்கையையே இலக்கியமாக்கி அதன்கண் சத்திய சோதனை செய்ய லானார் காந்தித் தாத்தா. தமிழிலக்கிய உலகிலே புகுந்து பல காலமாக மங்கி மறைந்து மாறிக் கிடந்த இலக்கியங் களுக்குள்ளே புகுந்து சத்திய சோதனை செய்தார் தமிழ்த் தாத்தா. அறிவாலும் தியாகத்தாலும் அன்பினாலும் இருவரும் தம்முடைய சோதனைகளில் வெற்றி பெற்று வந்தவர்கள். ஒருவர் உலகறிய வெற்றி பெற்றார்; மற்றொருவர் தமிழுலகறிய வெற்றி பெற்றார்.

தம்முடைய வாழ்க்கையிலே உண்மையைக் காண்ப தொன்றையே லட்சியமாகக் கொண்டவர் காந்தித்தாத்தா எவ்வளவு இடையூறு நேர்ந்தாலும், கவர்ச்சிமிக்க பகைஞர் வரினும், ஆற்றல் மிக்க எதிர்ப்பு வரினும் எல்லாவற்றையும் சாந்தத்தோடு புன்னகையுடன் சகித்துப் பகைவரும் போற் றும் நிலையில் மேலெழுந்து நிற்கிறார். தமிழ்த் தாத்தா இலக்கிய சோதனை செய்யப் புகுத்தபோதும், புகுந்தபிறகும் உண்டான இடையூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல. மதவெறி, பொறாமை, வறுமை எல்லாம் அவருக்கு எதிரே நின்றன. 'சைவ மடத்தில் படித்தவர் ஜைன நூலையா பதிப்பிப்பது? என்று சமயத்தின் பெயரால் ஒரு கூட்டத்தார் உறுமினர். இவ்வளவு காலம் பெரும் புலவர்கள் செய்யாத வேலையா இவர் செய்துவிடப் போகிறார்!’ என்ற அலட்சிய புத்தி யோடு கண்ணைச் சிமிட்டி ஏளனம் செய்தார் ஒரு சாரார். தமிழிலக்கியத்தைப் பூம்பொழிலென்றும், கற்பகச் சோலை யென்றும் நாம் சிறப்பிக்கிறோம். சங்க இலக்கியம் அக்