பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 86 - கி. வா. ஜ. பேசுகிறார்

காலத்தில் சோலையாகவா இருந்தது? கறையான் புற்று. எழுந்து, கரப்பான் பூச்சி பந்தலிட, ஆற்று நீரால் அறுப் புண்டும், தீயின் நாக்கினால் சுவைக்கப் பெற்றும், மனிதர் புக முடியாத பெருங் காடாகக் கிடந்தது. இந்தக் காட்டில் சத்திய சோதனை செய்யப் புறப்பட்ட ஐயரவர்கள் தம் கூரிய அறிவாகிய கோடரியையும் இணையற்ற தமிழன் பாகிய கட்டுச்சாதத்தையும் பரந்த நூலறிவாகிய கவசத் தையும் தம் துணையாகக் கொண்டு புகுந்தார்; வழி கண் டார்; பயன் மரங்களையுங் கண்டார்; பழங்களையும் தொகுத்தார்; தமிழர் விருந்தயர வழங்கினார். இந்தச் சத்திய சோதனையை அ ப் பெ ரி யார் எழுதிய ‘என் சரித்திரம் நன்றாக தெரிவிக்கிறது.

இப்படி, சத்திய சோதனையை செய்த இரண்டு தாத் தாக்களும் சந்தித்தால் எப்படி இருக்கும்? சந்தித்தார்கள். சந்தித்தபோது நிகழ்ந்தவற்றை, பேசியவற்றைக் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் இன்புற்றேன்.

& g o too 参季 , о а

1937-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் சென்னையில் ஹிந்தி பிரசார சபையில் பாரதிய சாகித்திய பரிஷத்தின் இரண்டாவது மகாராடு நடைபெற்றது. அதன் தலைவர் காந்தித் தாத்தா. வரவேற்புக் கழகத்தின் தலைவர் தமிழ்த். தாத்தா. பாரதவர்ஷத்திலுள்ள பலவேறு நாடுகளினின்றும் இலக்கிய ஆராய்ச்சியின் பொருட்டுப் பல அறிஞர்கள் வந்து: கூடியிருந்தார்கள்."

மகாநாடு நடப்பதற்கு முன்னர், தமிழ்ப் பெரியார் காந்தியடிகளைப் பார்க்கச் சென்றார், ராஜாஜி அவரை அறிமுகப் படுத்தினார். காந்தியடிகள், 'உட்காருங்கள் ஐயா!' என்று தமிழிலே சொல்லி வரவேற்றார். அப்படிச் சொல்லும்போது தம் திருக்கரங்களை உயரத் தாக்கி அழுத்துவதுபோல பாவனை செய்தார். வார்த்தையில்