பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தாத்தாவும் காந்தித் தாத்தாவும் 187

"உட்க்காருங்கள்’ என்று க்கை அழுத்தியதும் கைகளை அழுத்தியதும் சேர்ந்தாற் போல் நிகழ்த்தன. இரண்டு கிழவர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மகாநாடு ஆரம்பமாயிற்று. தமிழ்த் தாத்தாவின் பிரசங்கம் தமிழிலே இருந்தது. அதை ஹிந்தியில் மொழி பெயர்த்துத் தனியே அச்சிட்டிருந்தார்கள். கையிலே கழியை ஊன்றிக்கொண்டு அறிவினால் பெருத்த தலைக்கு மேலே உருவினாற் பெருத்த தலைப்பாகை தனியடையாளமாக விளங்க மேடைமேல் ஐயரவர்கள் ஆஜானுபாகுவாக தின்றபோது, போதியமலைதான் நிற்கிறதோ என்று தோற்றியது.

வரவேற்புப் பிரசங்கம் தமிழின் பழமையையும், விரிவை யும், தமிழ் நூல்களின் இனிமையையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லியது. சங்க இலக்கியங்கரின் அழகை மிக அருமையாகப் படம் பிடித்துக் காட்டுவது போலப் பெரியார் வருணித்தார். -

உலகத்துப் பேரறிஞர்களாற் புகழப் பேற்றவரும், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரும் ஆகிய மகாத்மா காந்தியடிகளின் அன்பினால் உண்டான இந்த மகாசபையில் தானும் கலந்துகொள்ளும்படி நேர்ந்த இந்நாளை என் வாழ்க்கையிற் சிறந்த தாளாக எண்ணுகின்றேன்' என்று தம் மகிழ்ச்சியையும் காந்தியடிகளின்பாலுள்ள மதிப்பையும் தெரிவித்துக் கொண்டார்.

அவையடக்கத்திலேயே அவருடைய கி பரு ைமயும் வெளிப்படுகிறது. தமிழ் வித்துவான்களின் நிலைமை புலவர் .களின் ஒற்றுமை, பிற நாட்டினரோடு பழக்கம், தமிழின் பழமை, தமிழின் சிறப்பு, பண்டைத் தமிழ்க் கவிதை, பண் டைத் தமிழரின் நிலப்பகுப்பு, அரசியல் முதலியன புலவர் களின் ஒற்றுமையால் உண்டாகும் பயன் முதலியவற்றைச் சொல்லி, நாம் இனி என்ன செய்ய வேண்டுமென்பதையும் வற்புறுத்தினார். - -