பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல் விகை மாலை - 2贾”

எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணமெல்லாம் அமைந்தது கவிதை என்று புலவர் அபிப்பிராயப்படுகிறார் என்றுதான் தெரிகிறது. முக்கிய மான விஷயத்தையே புலவர் சொல்லவில்லை. அதுதான் பொருள்; உள்ளத்து உணர்ச்சியையும் கருத்தையுந்தான் பொருளென்று சொல்லுகிறோம்; அதைப்பற்றி ஒரு வார்த்தை இல்லை. வெறும் கல் கட்டிடமாக வைத்து விட்டார் பாட்டை, முன்னே சொன்ன மல்லிகை மாலை எங்கே? இந்த வெறுங் கல் கட்டிடம் எங்கே?

3

இப்போது இந்த இரண்டு காலத்துக் கவிதைகளுக்கும் உதாரணங்களைப் பார்க்கலாம்.

கடற்கரைப் பக்கத்திலேயுள்ள சிறிய ஊர்; அங்கே காதலி ஒருத்தி காதலனுடைய இன்ப அணைப்பிலே தன்னை இழந்து பிறகு அவன் பிரியவே, தன்னை உணர்ந்தாள். பிரிவுத் துன்பம் அதிகரித்தது. காதலனைப்பற்றியே நினைத் துக் கொண்டிருந்தாள். வீட்டிலே ஒரு வேலையும் ஒட வில்லை. தன் ஆசைக் காதலனோடு பழகிய கடற்கரைச் சோலைக்குப் போய், அங்கே அவன் நடந்த இடத்தையும் நின்ற இடத்தையும் பார்த்தாவது ஆறுதல் அடையலா மென்று போனாள் போய்ச் சோலையைப் பார்த்தாள்..பிறகு கடற்கரை மணலில் அவன் தேரைச் செலுத்திக்கொண்டு திரும்பிப் போனபோது உண்டான சுவடுகளைப் பார்க்க வந்தாள். அந்தச் சுவட்டைப் பார்ப்பதிலே அவளுக்கு ஒர் ஆனந்தம். கடற்கரை அல்லவா? நண்டுகளெல்லாம் அங்கும் இங்கும் ஒடி விளையாடிக்கொண்டிருந்தன. தேர் போன சுவட்டினுள்டே ஓடியோடி அண்டையிலுள்ள மணலைத் தள்ளிக் கொண்டானடித்தன. அதைப் பார்க்கையில் தலை விக்குப் பொறுக்கவில்லை. நண்டுகளின் விளையாட்டினால் கி-2 - -