பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧2 கி. வா. ஜ. பேசுகிறார்

தேர்ச் சுவடு சிதைந்து போகிறதே! அவள் மனமும் அல்லவா சிதைகிறது! அட! இங்கேயும் தமக்குத் துன்பந்தானா? என்று பொருமுகிறாள். அவளுக்கு உண்டாயிருக்கும் காதற்பித்து அளவு கடந்தது. இன்னாரிடம் இன்ன பேசுவது என்று தெரியவில்லை. நண்டைப் பார்த்துப் பொங்கிவரும் உணர்ச்சியைக் கொட்டுகிறாள். .

'நண்டு ராஜாவே, உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள் கிறேன் ! என்னுடைய காதலனது தேர் போன வழியைக் கண்ணாரக் கண்டு ஆறுதல் பெறலாமென்று வந்திருக் இறேன். நீ அந்த வழிமேல் நடந்து அதைச் சிதைக்காதே’ என்று நயந்து வேண்டிக் கொள்கிறாள். கவியில் இந்தக் கருத்து எப்படி மலர்ந்து மணக்கிறது. பார்க்கலாம்.

கொடுத்தாள் அலவ, குறையாம் இரப்பேம், ஒடுங்கா ஒவிகடற் சேர்ப்பன்-நெடுந்தேர் கடந்த வழியை எம் கண்ணாரக் காண நடந்து சிதையாதி நீ. 'உனக்கு அழகாக வளைந்த கால்கள் இருக்கின்றன: அவற்றை இந்தக் காரியத்தைச் செய்வதற்கு உபயோகிக் காதே' என்று ஞாபக மூட்டுபவளைப்போலக் கொடுத்தாள் அலவ-வளைந்த காலையுடைய நண்டே' என்று அழைக் கிறாள். குறையாம் இரப்பேம் -பாட்டினுடைய ஜீவன். இதில்தான் இருக்கிறது. "என்னுடைய காரியம் ஒன்றை உன்னிடத்தில் யாசிக்கிறேன்.' ஆம்! அவள் தலைவன் பிரிவி னால் நைந்து போய் நிற்கிறாள்; அவளுக்குத் தாரகமாக இருக்கிறது தேர்ச் சுவடு, அதைப் பார்ப்பதிலே அவள் உயிர் நிற்கிறது. அது சிதைந்தால் அவள் உள்ளமும் உயிரும் - சிதை கின்றன. ஆகையால் அவள் - 'உண்மையில் கெஞ்சித்தான் வேண்டுகிறாள். இந்த வார்த்தைகள் அவளுடைய இருதயத் திலிருந்துவெளிவருகின்றன. எதை யாசிக்கிறாள்? ஒடுங்கா ஒலிகடற் சேர்ப்பன்-அடங்காத முழக்கத்தையுடைய கடல்