பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லிகை மாலை £3

துறைக்குத் தலைவனாகிய என் காதலனுடைய நெடுந்தேர்உயர்ந்த தேரானது, கடந்த வழியை-சென்ற வழியை, எம் கண் ஆரக்காண-என்னுடைய கண்ணாரக் கண்டு ஆறுதல் பெற வேண்டும்; அதற்காக, நடந்து சிதையாதி நீ-நீ அதன் மேல் நடந்து அதைச் சிதைக்காதே. - -

அவளுடைய பணிவும், பெண்மைத்தன்மையும், அந்தத் தேர் வழியைப் பார்ப்பதிலே அவள் தன் உயிரையே சார்த்தி வைத் திருப்பதும் பாட்டில் எவ்வளவு நன்றாக மணக் கின்றன: இதுதான் மல்லிகையின் வண்டார் கமழ்தாமம். .

4.

கல்கட்டிட காலம். இதேமாதிரி ஒரு காட்சியை ஒரு புலவர் செய்யுளிற் சொல்கிறார். வழியைக் கண்டு சிதைப் பதற்குப் பதிலாகக் கடலின் அலை சிதைக்கிறது. அந்தக் கடலைப் பார்த்துக் காதலி சொல்வதாக அமைந்திருக்கிறது செய்யுள். -

விரதத் தவர்தொழும் ஆரூரர், வீதி விடங்கர், அஞ்சப் பரதத் தவர்,கண்டம் காரெனச் செய்த பனிக் கடலே, சுரதத் துறைமறந் தேகினர் தேர்வழி துார்ப்ப

- - - - தெள்னோ! இரதத் தருமை தெரியாதன் றோவிடம் ஈந்தவர்க்கே! இங்கே தலைவியின் காதல் நமக்குத் தெரியவில்லை. அவள் கோபந்தான் தெரிகிறது; கோபத்தால் சிலேடையாக வையும் சக்தியுடையவளென்று தெரிகிறது. வெள்ளையாகச் சொன்னால் முன் கவியிலே நாம் பார்த்த காதலியையே காணவில்லை. புலவர்தாம் தம்முடைய சிலேடையணியோடு

நிற்கிறார். - -

கடலில் உண்டான விஷத்தைச் சிவபெருமான் துஅர்த் தார். இந்தப் புராணக் கதையைப் புலவர் உபயோகித்து ச் சொல்கிறார். .