பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கி. வா. ஜ. பேசுகிறார்

விரதத்தவர் தொழும் ஆரூரர் வீதிவிடங்கர்-தவம் செய்பவர்கள் தொழுகின்ற திருவாரூரில் இருக்கும் வீதி, விடங்கர், அஞ்சப்பரதத்தவர்-ஹம்ச நடனம் புரிபவராகிய சிவபெருமானுடைய, கண்டம் கார் எனச் செய்த பனிக் கடலே-திருக்கழுத்தை மேகமென்று சொல்லும்படி கறுப் பாகச் செய்த குளிர்ச்சியை உடைய கடலே, சுரதத்துறை மறந்து ஏகினர்-லீலைகளின் வகைகளை மறந்துவிட்டுப். போன காதலருடைய, தேர்வழி-தேர்போன் வழியை, துர்ப்பது என்னோ-துாரும்படி செய்வது ஏன்?.அவளே பதிலும் சொல்லிக் கொள்கிறாள். இரதத்து அருமை தெரி: யாதன்றோ, விடம் ஈந்தவர்க்கே-விஷத்தைத் தந்த கொடிய வர்களுக்கு இரதத்தின் அருமை தெரியாதல்லவா? தமிழில் ரஸ்ம் என்பது இரதம் என்று வரும். விஷம் கொடுத்தவர். களுக்கு ரஸத்தின் அருமை தெரியுமா என்ன?’ என்று வேறு அர்த்தம் ஒன்று தொனிக்கிறது. சிலேடையோடு வந்த வேற்றுப் பொருள் வைப்பணி என்று இதைச் சொல்லு, வார்கள். - -

எல்லாம் சரிதான். சுரதத்துறை மறந்து' என்னும் காதலி, சுரதத்துறைகளைத்தான் முக்கியமாக எண்ணி னாளா? சிலேடையிலேதான் வைதாளா? இரதம் என்ற வார்த்தையை இரண்டு அர்த்தம் வரும்படி அமைக்க வேண் டும் என்று நினைத்தார் புலவர். 'இரதத்தருமை தெரியா தன்றோ விட மீந்தவர்க்கே’’ என்று கடைசி அடியை, முதலிலே பாடிக்கொண்டார். அதற்கு ஏற்ற எதுகை வரும் படி வார்த்தைகளை எடுத்து அடுக்கினார். சுரதத்துறை" தான் அவருக்குக் கிடைத்தது. எல்லாவற்றையும் மறந்து இரதத்தருமை எ ன் ற சொற்களிலே தலைமையை வைத்துப் பாட்டைப் பாடின. அவரிடம் மல்லிகை மலர் மாலையை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்தமாதிரி அலங்காரங்களையும் சொல்லில் வரும் சமற்காரங்களையும் அமைப்பதற்கும் ஒரு பழக்கம்