பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லிகை மாலை 25

வேண்டும். கழைக்கூத்தாடி டபடப வென்று காதை அடைக் கும்படி பறையை முழக்கிக்கொண்டும் அதற்குமேல் தன் தொண்டைப் பலத்தை வெளிப்படுத்திக் கொண் டு ம் உடம்பை வளைக்காதபடி எல்லாம் வளைத்துக் காட்டு கிறானே, அந்த வித்தையைப் பார்த்து நாம் வியக்க வில்லையா? அதைச் சேர்ந்தது இத்தகைய செய்யுள் வித்தை. முதலில் சொன்ன கவிதையோ அழகும் மென்மை யும் நிரம்பிய அணங்கு ஒருத்தி இன்னிசைக் கீதத்தினிடையே மெல்லென்று நடனம் ஆடினால் எப்படி இருக்கும், அப்படி இருக்கும் அநுபவத்தைத் தருவது. கழைக்கூத்தாடியின் வித்தையில் ஒவ்வொரு கணமும் அவனைத் தனியே நின்று பார்க்கிறோம். மெல்லியலின் இன்னிசைக் கூத்திலே நம்மையே மறந்துவிடுகிறோம்; தூங்கியே போகிறோம். சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை என்று அப்பர் சொல்கிறார். பாரதியாரும் கவிதையாம் மணிப்பெயர்க் காதலியோடு பெற்ற அனுபவத்தை,

நின்னொடு களித்து நினைவிழந் திருந்த

ᏀᎢ☾Ꭲ ó ☾Ꮫ

என்று சொல்கிறார்.

அன்று கவிதை இருந்தது; நேற்று செய்யுள் ஆரவா ரித்தது; இன்று பாரதியின் கவிக்குயில் கூவுகிறது. பாரதி சகாப்தம் ஆரம்பமாகி யிருக்கிறது. பாரதி, கவிதை யுலகத் திலே புது யுகத்தை உண்டாக்கினார்.

பள்ளத்தி லேநெடு நாளழு கும்கெட்ட

பாசியை எற்றிவிடும்-பெரு வெள்ளத்தைப் போலக்

கவிதை வெறி முண்டு தம் பாட்டுத் திறத்தாலே இவ்வைத் தையே பாலிக்கும் கவிமன்னர் பாரதியார். அவரால் இன்று