பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கி. வா. ஜ. பேசுகிறார்

அருணோதயம் ஆகியிருக்கிறது. இனிக் கவிதையுலகத்தில் ஒளி பரவ வேண்டும்; அதனால் தமிழுலகம் இன்பக் களி துளும்பி எழ வேண்டும்.

மண் சுமந்த கதை

அழகிய மலர், மணம் செறிந்து தளதளவென்று கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. அதைக் கண்ட உடனே மனசுக்கு ஏதோ ஒரு தனி உல்லாச உணர்ச்சி உண்டாகிறது. மணத்தின் மோகன சக்தியும் நிறத்தின் கவர்ச்சியும் நம்மை ஆட்கொள்கின்றன.

மலரின் நிறத்திலே ஈடுபட்டால் அதை அப்படியே சிறிது நேரம் பார்த்து அனுபவிக்கிறோம்; அதன் மணம் - நமக்குப் புலப்படும்போது இன்னும் சிறிது அதிகமாக நம் மனத்தை அதன்பால் செலுத்தி இன்புறுகிறோம். அதனிடம் இயற்கையாக உள்ள மென்மையை அநுபவிக்க ஆரம்பித் தாலோ, சில நேரம் பிரமித்து நின்று விடுகிறோம்.

மலரின் நிறம் எல்லோருடைய கண்ணிலும் சட்டென்று. படும்; அதன் மணம் சற்றுக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்; அதன் மென்மையோ நன்றாகக் கவனிப்பவர் களுக்குத்தான் புலப்படும். மலரின் முழு அழகையும் நுகர வேண்டுமானால் நன்றாகக் கவனித்து உள்ளத்தை அதன் கண்ணே செலுத்தித்தான் பார்க்க வேண்டும்.

அழகுக்கு இருப்பிடமாகிய கலைப் பொருள்கள் எல்லா வற்றையும் நறுமண மலர்களாகச் சொல்லி விடலாம். தெய்வத்தைப் பூஜிக்க மலர்கள் உதவுகின்றன. கலைப் பொருள்களும் மிகச் சிறந்த மதிப்பை உடையனவாய் டியர்ந்த இடத்திலே விளங்கக் கூடியவை எவ்வளவுக்கு எவ்வளவு அழகுணர்ச்சியோடும் அன்போடும் மனிதன்