பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் சுமந்த கதை 27

அவற்றை நுகரத் தலைபடுகிறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றின் இனிமை பெருகிக் கிடக்கும்.

கலைப் பொருள்களிலே சிறந்தது கவிதை, கலை மரத் திலே விளைந்த பல பல பொருள்களிலே மலரைப்போல நிற்பது அது. தன்னுடைய சுகந்தத்தினாலே வண்டினங் களை அழையாது அழைக்கும்ஆற்றல் வாய்ந்தது. அதன்கண் ஈடுபட ஈடுபட இன்பம் சுரக்கும். 'நவில்தொறும் நூல்நயம் போலும்' என்று திருவள்ளுவர் சொல்கிறார். மரத்தில் இலைக் கூட்டத்துக்கு நடுவே மலர்கள் விளங்குவது போலச் செய்யுட்களின் கூட்டத்தில் சுவையுடைய கவிதைகள் விளங்குகின்றன. மனமில்லாத மலரையும் மணமுள்ள மலரையும் வைத்து ஒப்பு நோக்கும்போது மணமுள்ள மலரின் சிறப்பு நன்றாகத் தெரிகிறது. கவியுலகத்திலும் அப்படிப் பார்க்க வழி இருக்கிறது.

ஒரு கருத்தைப் பல புலவர்கள் எடுத்து ஆண்டிருப்பார் கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியத்திற்காக ஒவ்வொரு முறையில் அந்தக் கருத்தைக் கோலம் செய்திருப்பார்கள்; சில புன் கவிகள் அதை அலங்கோலம் செய்வதும் உண்டு. உபயோகமில்லாத பொருளென்று நாம் நினைக்கும் ஒன்றைக் கவியுலகத்திலே கவிஞன் மிகவும் சிறந்ததாகக் காட்டி விடுவான். மாயா ஜால மந்திர சக்தியை விஞ்சிய அவனுடைய மோகன வித்தை உலகில் எங்கும் இல்லை.

- 2

மதுரையில் பூரீ சொக்கநாதக் கடவுள் அறுபத்துநான்கு திருவிளையாடல்களைப் புரிந்தருளினார். அடியார்களிடத் தில் அப்பிரானுக்கு உள்ள கருணையைப் புலப்படுத்துவன அவை. அவற்றுள் மண் சுமந்த திருவிளையாடல் என்பது ஒன்று. மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்த பாண்டிய லுக்கு அப்பெரியாருடைய பெருமையை இறைவர் புலப் படுத்த எண்ணினார். வையையிலே பெருவென்ளம் வரச்