பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 38 கி. வா. ஜ. பேசுகிறார்

செய்தார், மதுரைமா நகரில் வையைக் கரையை உயர்த்தும் முயற்சியில் நகரமக்கள் ஈடுபட்டனர். ஒவ்வொருவருக்கும் அந்த வேலையில் பங்கு பாண்டிய அரசனால் வரையறுத்து அளிக்கப்பட்டது. அங்கே பிட்டுச் சுட்டு வியாபாரம் செய்து வந்த ஒரு கிழவிக்குச் சொக்கநாதக் கடவுளே வேலையா னாக வந்து வேலையைக் கவனிக்காமல் பேசிக்கொண்டே இருந்தார். மேற்பார்வை பார்த்து வந்த பாண்டியன் அவரைக் கண்டு தன் கைப் பிரம்பால் அவர் முதுகில் அடித் தான். அவ்வடி சர்வ சராசரங்களின் மேலும் பட்டது.வேலை யாளாக வந்த சொக்கநாதர் ஒரு கூடை மண் கொட்டி உடைப்பை அடைத்து மறைந்தருளினார். எல்லா உயிர் களிடத்திலும் உறையும் கிவபெருமானே வேலையாளாக வந்தது தெரிந்து பாண்டியன் மனமுருகினான். மாணிக்க வாசகரைச் சிறையினின்றும் விடுதலை செய்தான். அன்பர் களெல்லாம் சொக்கநாதரைத் துதித்தனர். -

இந்தக் கதை தமிழில் பிற்காலத்து இலக்கியங்களில் அடிக்கடி வரும். எத்தனையோ புலவர்கள் இந்தத் திருவிளையாடற் செய்தியைச் சாதுரியமாக எடுத்து ஆண்டிருக்கிறார்கள்.

மாணிக்கவாசகர் பொருட்டாகவே ைவ ைய யி ல் வெள்ளம் வரச் செய்ததாக அசரீரி சொல்லப் பாண்டியன் அவரை விடுவித்து வழிபட்டான் என்பது புராணம்,

மாணிக்கவாசகர் சிறந்த சிவபக்தர்! சைவ சமய ஆசாரி யர்களில் ஒருவர். அவர் மனம் உருகிப் பாடிய பாடல்களைத் திருவாசகத்திலே காணலாம். இறைவன் தமக்காக மண் சுமத்து அடிபட்டுப் புண் சுமந்த செய்தியை அவர் பல இடங் களில் சொல்வியிருக்கிறார். 'மண்ணைச் சுமந்து பிட்டு விற்பவளிடத்தில் பிட்டையே கூலியாக வாங்கிப் பாண்டிய னுடைய பிரம்பினால் அடி பட்டுப் புண் சுமந்த பொன்மேனி

யைப் பாடுவோம்" என்று ஓரிடத்தில் பாடுகிறார். .."