பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.மண் சுமந்த கதை 29

மண் சுமப்பது எத்தனை இழிவான் வேலை! அதற்குக் சுலி வாங்குவது அதைவிடக் கேவலம்; ஒருவன் அடிக்க அடிபடுவது சகிக்க முடியாத இழிவு. இவ்வளவையும் அப் பெருமான் பக்தர் பொருட்டுச் செய்தான். சிறிது நாசரிகம் படைத்த மனிதன் கூடச் செய்ய அருவருக்கும் இந்த வேலை யைச் செய்தவன் எத்தகையவன்? அவன் பெருமையைப் பண் சுமந்த பாடல்கள் எத்தனையோ காலமாகப் பாடி வருகின்றன. கருணையே திருவுருவாக உடைய எம்பெரு மாட்டியை வாம பாகத்தில் ஏற்றிருக்கிறவன், திருப்பெருந் துறையில் இருப்பவன்,வானுலகமெல்லாம் பரவிய கீர்த்தியை உடையவன், எல்லா உலகங்களுக்கும் ஈசன், நெற்றியிலே கண்படைத்த பெரியவன். அவன் மதுரையிலே மண் சுமந் தான், கூலி வாங்கினான், அடிபட்டான் என்றால் எவ்வளவு பெருங் கருணை அவன்பால் இருக்க வேண்டும்! இந்தச் செய்தியைக் கேட்கும்போதே அன்பர்களுடைய உள்ளம் கசியும். இதற்குக் காரணமான மாணிக்கவாசகர் உருகுவதற் குச் சொல்ல வேண்டுமா? பெண்களை எல்லாம் அழைத்து, 'அந்தப் புண் சுமந்த திருமேனியைப் பாடுதுங்காண் அம்மானாய்’ என்று அம்மானைப் பாட்டாகப் பாடுகிறார்.

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் வின்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்! |பண்-ராகம். மண்டலம்-உலகங்கள். கலி-முழக்கம். கோ-அரசன்.) -

பக்தர்களுக்கு இனிக்கும் பாட்டு இது.