பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.30 கி. வா. ஜ. பேசுகிறார்

மண் சுமந்த கதையில் பல கட்டங்கள் இருக்கின்றன . வந்தியின் பிட்டுக்காக இறைவர் வந்தது, மண் சுமந்தது, கூலி வாங்கினது, அடிபட்டது, அடித்த பாண்டியன் உட்பட எல்லோருடைய முதுகிலும் அந்த அடி பட்டது. பிறகு பாண்டியன் உணர்வு பெற்று மாணிக்கவாசகரை விடுதலை செய்தது என்று கதை படர்ந்து நடக்கிறது. இதில் கடைசிப் பகுதியை ஒருவர் தினைத்தார். இறைவரது முதுகிலே அடித்த அடி எங்கும்பட்டது. ஆகையால் அவர் எவ்வுயிரிலும் நீங்காது உறைபவர் என்ற உண்மை வெளியாயிற்று இப்படிச் சொன்னாலே போதும். ஆனால் அவர் இந்தச் செய்தியைப் பின்னும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். கடவுள் எங்கும் பரந்தவர் என்று இதனால் தெரியவில்லையா?’ என்று கேட்டிருக் கலாம். அதற்கு மேலும் போனால், எங்கள் சிவபெருமான் எங்கும் நிறைந்தவர் என்பது தெளிவாகிறது என்று சொல்லி யிருக்கலாம். அதுவும் அவருக்குப் போதவில்லை. சமய அறிவிலே ஊறினவர் அவர்; சமயவாதி. இந்தச் செய்தி யைக் கொண்டு வாதம் செய்ய, வாய்ச் சண்டை போட எண்ணினார். 'உங்கள் சாமி உலகமெல்லாம் நிறைந்தவர் என்று சொல்ல முடியுமா? பிரமா, விஷ்ணு, சிவன் என்று. வரிசையாக எண்ணுகிறீர்களே. பிரமன் ஒரு சமயம் அடிபட் டான். முருகன் நறுக்கென்று அவன் தலையிலே குட்டினான். பிரமதேவன் எங்கும் நிறைந்தவனாக இருந்தானானால் அத்தக் குட்டு எல்லோருடைய தலையிலும் பட்டிருக்க வேண்டுமே! அப்படி நடக்கவில்லையே! கிடக்கட்டும். மகா விஷ்ணுவின் கதை என்ன? இடைச்சி கையில் அடிபட்டாரே. அத்த அடி யார்மேல் பட்டது? எங்கள் பசுபதிமேல் பட்ட அடி எல்லார் மேலும் பட்டது பாருங்கள். இதனால் யார் பெரியவர் என்று தெரிகிறது? - இப்படியெல்லாம்.