பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் சுமந்த கதை 3 £

அவருடைய கற்பனை ஓடியது. அதை ஒரு வெண்பாவாகச் சொல்வி விட்டார். -

எண்கணனைக் குட்டியகுட்டு எங்கேனும் பட்டதோ

மங்கைஅரி மேல் அடித்த மத்தடிபோய்-எங்கேனும்

பட்டதோ எங்கள் பசுபதிமேற் பட்ட அடி

பட்டதே எவ்வுயிர்க்கும் பார்.

[எண்கணன்-எட்டுக் கண்ணையுடைய பிரமன், அரி -- கண்ணன்.1 -

மண் சுமந்த கதையில் இறைவர் தாம் பட்ட அடியை மறந்தாலும் இவர் மறக்கவில்லை. கடவுள் மேனி புண்பட் டதோ இல்லையோ, மற்றத் தெய்வங்களை வழிபடும். அன்பர் மனம் புண்படும்படி பாட்டால் அடிக்கிறார். இந்தச். சமயவாதி. - -

4.

ஒரு கவிஞன் இந்தச் செய்தியைக் கேட்டான். அவன் பக்தனாக இருந்திருக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சமய வாதி அல்ல. அவனுடைய கவிதையுள்ளம் வேலை செய்ய ஆரம்பித்தது. சொக்கநாதப் பெருமானைக் கடவுளென்றோ எல்லாத் தெய்வங்களிலும் உயர்ந்தவரென்றோ சித்தாந்தம். செய்ய அவன் வரவில்லை போலும் அவர் மண் சுமந்து ஒரே கூடையின்ால் வையை உடைப்பை அடைத்தார் என்ற காட்சியை மாத்திரம் அவன் அநுபவித்தான். -

கவிக்கு உபயோகமான பொருள் அல்லவா இது:இதைக். கொண்டு சொக்கநாதரையே அழைத்து வந்து விடலாமே!” என்று கவிஞன் நினைத்திருக்க வேண்டும். அவருக்கு மற்ற வர்கள் கொடுத்திருந்த வேஷத்தை எல்லாம் களைந்து விட்டுக் காதலனாக வேஷம் புனைந்து விட்டான். காதலன்:

என்றால் காதலி இல்லாமலா? ... ."