பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛2 கி. வா. ஜ. பேசுகிறார்

காதலன் காதலியைப் பிரிந்து இருக்கிறான். அவர் இன்னும் வரவில்லையே!' என்று அவள் உருகுகிறாள். கண் tைர் ஆறாகக் கடலாகப் பிரவகிக்கிறது. அதைப் பார்த்துத் தோழி சொக்கநாதராகிய காதலனிடம் முறையிடுகிறாள். வேலைப் போலக் கூர்மையான பார்வை பெற்ற கண் களை உடையவள் இந்தக் கன்னிகை. இந்தக் கண்கள் இப் போது கூர்மையை இழந்து அழுகின்றன. கண்ணிர் பிரவாக மோகப் பொங்கிக் கடலைப்போலப் பெருகுகிறது. இதற்கும் எல்லையுண்டு, இது பெருகி உடைத்து விட்டால் அப்புறம் அடைக்க முடியுமா என்ன? அதற்கும் உபாயம் உண்டோ?... ஆகோ! வையை யாற்று வெள்ளத்தை அடைத்த பேர்வழி அல்லவா நீ! அதுமாதிரி இதை அடைத்து விடலாமென்று நினைக்கிறாயா? அது இங்கே நடக்காது. அங்கே சும்மாடு இல்லாமலே ஏதோ ஒரு கூடை மண்ணைக் கைலாகவத்திலே சட்டென்று போட்டாய்; அடைந்து போய்விட்டது. இங்கே அந்தத் தந்திரம் பலியாது. சும்மாடு கட்டிக்கொண்டு சுமந்து சுமந்து கூடைமேல் கூடை போட்டு அடைத்தாலும் இது அடைபடாது. அடைபட இது வையை ஆநல்ல சுவாமி, வையை ஆறு அல்ல. பரவை, கண்ணிர்ப் பிரவாகக் கடல் என்பது ஞாபகம் இருக்கட்டும். ஆற்றிலே செய்த தந்திரத்தைக் கடலிலே செய்ய முடியாது.” .

இப்படிச் சொல்கிறாள் தோழி.

படைத்தாரை வேற்கண்ணி கண்ணிர்

ப்ரவாகப் பரவைபொங்கி உடைத்தால் அடைக்க உபாயம் உண். டோதறை ஊற்றுகொன்றைத் தொடைத்தாம வேணியில் சும்மாடு

கட்டிச் சுமந்துசுமந்து அடைத்தால் அடைபடச் சொக்கே

இதுவையை ஆறல்லவே!