பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்கால இலக்கியம் 35

களையும் ஜனங்கள் அவருக்குப் பயபக்தியோடு சலாம் செய் வதையும் பார்த்தார். எவ்வளவோ பிரபுக்கள் அரசருடைய திருஷ்டி எப்போது தம்மீது படுமோ என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அசந்து மறத்து தம்முடைய பக்கம் திரும்பினால் உடனே சலாம் செய்ய வேண்டுமென்று தம் கையை நெற்றிக்கருகிலே வைத்துக்கொண்டு நின்றனர். சிலர். அந்தக் காட்சியை முனிவர் கண்டு பெரிய ஆச்சரி யத்தை அடைந்தார். சலாமிடுவதற்கு ஏங்கி நிற்கும் அந்தக் செல்வர் நின்ற கோலமும், அவர் முகத்தில் தோற்றிய பாவமும் முனிவர் உள்ளத்தே நன்றாகப் பதிந்தன,

முனிவர் மதுரை மீனாட்சி அம்மை விஷயமாக ஒரு பிள்ளைத் தமிழ் பாடத் தொடங்கினார். அதில் முருகக் கடவுளைப் பற்றிச் சொல்ல வேண்டி வந்தது. வள்ளி நாயகி யின் பால் மட்டிலாக் காதல் கொண்ட அப்பெருமாள் அவளுடைய கடைக்கண்ணோக்கத்தைப் பெற வேண்டு மென்று ஏங்கி நின்றதாகச் சொல்லலாமென்று தோற்றியது. பாதுஷாவின் பார்வைக்கு ஏங்கி நின்ற பிரபுவின் கோலம் அவருக்கு உதவி செய்தது. --س .

............கலாமயிற் கூத்தயர் குளிர்புனம் மொய்த்திட்ட சாரலிற் போய்ச்சிறு குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரனை முத்துக் குமாரனைப் போற்றுதும்" என்று பாடினார். மயில்கள் நடனமிடுகின்ற, மலைச் சாரலிலே போய் அங்கே வாழ்கின்ற சிறிய குறமகளாகிய வள்ளிக்குச் சலாம் போடுவதற்காக ஏங்கி நின்ற குமரன்' என்று அதில் வருணிக்கிறார். பாதுஷாவைக் குமரகுருபர முனிவர் கண்டதனால் இத்தகைய வருனனையும், சலா மென்ற வார் த் ைத யும் இலக்கியத்திலே பொருந்தி, நிற்கின்றன. - - . .

இலக்கிய சிருஷ்டி கர்த்தர்கள் இப்படித்தான் காலதேச வர்த்தமானங்களைத் தங்கள் இலக்கியத்திலே ஏற்றிவிடு