பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛4 கி. வா. ஜ. பேசுகிறார்

களை இழித்துப் பேசுவதிலே இன்பங்காணும் உள்ளத்திற்கு அந்தப் பாட்டு இனிக்கும். எல்லாரிடத்திலும் அதைப் பாட முடியாது.

இறுதிப் பாடலோ, கதையை நம்பாவிட்டாலும்,சொக்க .நாதரைத் தெய்வமாகக் கொள்ளாவிட்டாலும் தமிழ் நயம் தெரியவர் யாராயினும் அவருக்கு இன்பத்தைத் தருகிறது. மண் கமந்து ஆற்றில் உடைப்பை அடைத்தவர் என்ற செய்தியைக் கற்பனைக்காகவாவது ஒப்புக்கொள்ளலாம், அந்தச் சிறு செய்தியை அகத்துறைப் பாட்டிலே பொருத்திக் கவிதைசெய்கிறான். கவிஞன். இதைச் சைவர் மாத்திரமல்ல கிறிஸ்தவர்கட அனுபவிக்கலாம்; 'சொக்கே இது வையை ஆறு அல்லவே' என்று சொல்லிச் சொல்லி அநுபவிக்கலாம்.

போர்க்கால இலக்கியம் .

குமரகுருபர சுவாமிகள் என்று ஒரு பெரிய புலவர் தமிழ் நாட்டில் இருந்தார். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் பாட புஸ்தகங்களில் வாசிக்கும், நீதிநெறி விளக்கம்' என்ற நூலை இயிற்றினவர் அவரே. அவர் ஒரு துறவி. காசியிலே பல வருஷங்கள் இருந்து வாழ்ந்தார். அங்கே ஒரு மடம் கட்டிக்கொண்டு புராணப் பிரசங்கங்களும், சன்மார்க்க உபதேசங்களும் செய்து புகழ் பெற்றார். அக்காலத்தில் டில் வியில் ஆண்டிருந்த மொகலாய மன்னர் அவருக்குப் பழக்கமானார். அந்த மன்னரிடமிருந்து குமரகுருபரர் சில நிலங்களைப் பெற்றார். . .

மொகலாய மன்னரின் சபைக்குப் போகும்போது அங்கு உள்ள காட்சிகளை எல்லாம் சுண்டு அநுபவித்தார். அந்த மன்னர் ஆஸ்தானத்துக்கு வரும்போது நடக்கும் மரியாதை