பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்கால இலக்கியம் 3*

இன்னும் ஆறாது சினனே, அன்னோ உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றி யோரே செறு வர் நோக்கிய கண்தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே! [அன்னோ-ஐயோ! உடற்றியோர்-சண்டையிட்டவர். சேறுவர்-எதிர்க்கும் பகைவர். ஆனா-அடங்கா) - - என்று பாடினார். போர்க்கால இலக்கியத்தில் பிள்ளை பிறந்த செய்தியிலும் போர்க்கோல வருணனை புகுந்து கொள்கிறது.

போர்க் காலத்து இலக்கியத்தில் போரைப் பற்றிய செய்திகளே தலைமை வகிக்கின்றன. காவியம் எழுதுபவர் கள் தம்மை அறியாமலே வீரச் சுவையில் பேனாவைத் தோய்த்த எழுதுகிறார்கள். புத்தக எழுத்தாளன் போர்க் காலத் தேவைகளை நிறைவேற்றப் பார்க்கிறான்; தன் னுடைய இயல்பான போக்கிலே அந்தத் தேவைக்கு ஏற்ற மாறுதல்களைச் செய்ய முற்படுகிறான். அப்படிச் செய்யா விட்டால் அவனைப் பத்தாம் பசலிப் பேர்வழி என்று யாவரும் சொல்லி விடுவார்கள். -

போர்க் காலத்தில் எழுதும் புத்தகங்களில் வேகமும் சுருக்கமும் சக்தியும் இருக்க வேண்டும் இல்லையானால் உலகம் மதிக்காது. போர்த்தீ படர்ந்து கொழுந்துவிட்டு எரியும்போது சம்பிரதாயங்களுக்கும் வருணனைகளுக்கும் இடம் இருப்பதில்லை. அன்ன நடையும் ஆனை தடையும். யுத்த காலத்திலே எடுபடுவதில்லை. சரேலென்று பாயும் சிங்கப் பாய்ச்சல் வேண்டும், குதிரையின் கதியிலே போக வேண்டும் நடை. - -

விஷயத்திலே மாறுதல், நடையிலே மாறுதல் வார்த்தை களிலேகூட மாறுதல்-எல்லாவற்றிலும் போர் புகுந்து கலந்து முடுக்குகிறது. காதற் கதைகளைச் சமாதான காலத்திலே

கி-3 -