பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கி. வா. ஜ. பேசுகிறார்

எழுதினால் ரசமாக இருக்கும். தென்றல் காற்று வீசும் மாலைக் காலத்தில் ஒரு பூம்பொழிலில் நிதானமாக அமர்ந்து கொண்டு வீணையை வாசிக்கலாம். பிரசண்டமாருதம் வீசும் போது வினையைக் கேட்பவர்கள் யார்? பலர் கூடி ஒடும் போது காது செவிடுபடும்படி முரசையல்லவா அடிக்க வேண்டும்? முரசத்தில் கமகம் இல்லையே என்றால், கமகத் துக்குக் காலம் அல்லவே என்றுதான் பதில் சொல்ல வேண்டி வரும். வெறி பிடித்த வீரக் கதைகளையும் வீர நிகழ்ச்சிகளை யும் போர்க்காலத்தில் எழுதினால், அவை உண்மையான வீரச் சுவை பொருந்தியனவாக இருக்கும். சுருதியோடு பாடும்போது காதுக்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது? போர்க் காலத்தில் எங்கும் போரைப்பற்றிய பேச்சே நிரம்பி வீரப்பாட்டுக்கு வேண்டிய சுருதி இயல்பாகவே அமைந்து விடுகிறது. மேலே வீரச்சுவையை வி ைள த்தால் அது பன்மடங்கு சோபிக்கும். அந்தச் சுருதியிலே காதலையும், ஹாஸ்யத்தையும் கொண்டு வந்தால் அபஸ்வரந்தான்

மிச்சம். . . .

இப்போது போர் நடக்கிறது. இக்காலத்தில் புதிய புஸ்த கங்களும் வெளிவருகின்றன. புத்தக வி யா பா ரி க ள் லாபத்தை மட்டும் எதிர்பார்த்துச் சுடச்சுட விற்கும் புத்த கங்களைக் கொண்டு வருகிறார்கள். போலத்தில் போர் தொடங்கியது முதல் அது வீழும்வரையில் பத்திரிகைகளி லெல்லாம் போலந்தைப்பற்றிய கட்டுரைகள்; போலந்தைப் பற்றிய சரித்திரப் புத்தகங்கள், போலந்திலே மனிதர்கள் எப்படி உடை அணிகிறார்களென்பது போன்ற சின்னச் சின்ன சமாசாரங்களுக்கெல்லாம் புத்தகத்தில் இ ட ம் கொடுத்தார்கள். அபிவினியா ஆஸ்திரேலியாவில் இருக் கிறதா, வட துருவத்திலிருக்கிறதா என்றெல்லாம் நினைக் கின்ற மாணாக்கர்களுக்கு அபிஸினியாவின் பூகோளம், சரித்திரம், பொருளாதாரம், சமூக சாஸ்திரம், இலக்கிய வளர்ச்சி என்பவைகளை மிகவும் கர்ம சிரத்தையோடு