பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்கால இலக்கியம் 39

அளட்ட முன்வந்த புத்தக எழுத்தாளர்களும் பிரசுரகர்த்தர் களும் எவ்வளவு லாபம் சம்பாதித்து விட்டார்கள். அரிச்சுவடியின் ஆரம்பத்தில் அணில் ஆடு இலை என்ற பாடங்களுக்குப் பதில் அபிஸினியா, ஆப்பிரிக்கா, இத்தாலி என்ற பாடங்கள் வந்துவிடுமோ என்றுகூட எண்ணும்படி யாகி விட்டது. எல்லாம் அபிஸினியாவின்மேல் இத்தாலி படையெடுத்ததன் பிறகு உண்டான ஆர்ப்பாட்டம். இன்றைக்கு அதே அபிஸினியா, பழைய கறுப்பன் கறுப்பனே என்றபடி பூகோளத்திலிருந்து மறைந்து ஒதுங்கி நிற்கிறது. எல்லாம் யுத்த தேவதையின் திருவிளையாடல்கள். மற்றக் காலத்தில் யாவரும் போற்றும் ஒன்றை மூலையிலே படுக்க வைப்பதும், புற்றிசைைப் போலச் சில நேர வாழ் வுள்ள புதிய விஷயங்களைப் புகுத்துவதும் அதனுடைய சாமர்த்தியச் செயல்கள். r

போர்க்கால இலக்கியத்தில் இலக்கணம் வேண்டாம்: ஆழம் வேண்டாம், வருணனை வேண்டாமென்று சொல் கிறார்கள். “காகிதம் இல்லை, கதையை அளக்காதே’ என்று கம்பெனிக்காரர் சொல்கிறார். 'லோடியம் குளோரைடைப் பற்றி எழுதினது போதும்; வெடி விமானத் தைப்பற்றி எழுதுமையா' என்று விஞ்ஞானியைப் பத்திரி கைக்காரன் கேட்கிறான். வாக்கியங்களை நீட்ட வேண் டாம்; இரண்டு வார்த்தைகளிலே முடித்துவிடும்; இலக் கணத்தையும் வருணனை யையும் போர் முடிந்த பிறகு வைத்துக் கொள்ளலாம்' என்று புத்தக எழுத்தாளனுக்குக் கட்டளை பிறக்கிறது. "இடி இடித்தது போல இருந்தது' என்று எழுதினால் கர்நாடகமென்று அடித்துவிட்டு, "குண்டு விழுந்ததுபோல் இருந்தது' என்று திருத்துகிறார்கள்.

இவை போர் செய்த மாற்றங்கள். தொழிலாளி, விவசாயி, வியாபாரி, உத்தியோகஸ்தன் எல்லோரும் போருக் காக உழைக்கும்போது புத்தக எழுத்தாளன் மட்டும் தாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கடல்