பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கி. வா. ஜ. பேசுகிறார் -

சூழ்ந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டு தாமரை போன்ற முகத்தையும் கிளிபோன்ற சொல்லையும் அன்னம் போன்ற நடையையும் உடைய நாரீமணிகளைச் சிருஷ்டித்துக் கொண்டு இருப்பது நியாயமா? டைனமெட் பதித்த கட்டிடம் திடீரென்று ஒரு கணத்தில் தரை மட்டமானது. போல அவன் சிருஷ்டிக்கும் கதாநாயகனது கற்பனை தகர வேண்டும். அவன் அபாயச் சங்கைப் போல அழ வேண்டும். நீர் மூழ்கியைப்போல அபாயத்தில் முழுகி எதிரிக்கு, ஆபத்தை உண்டாக்க வேண்டும்.

இப்படி அவன் எழுத்து இருந்தால்தான் போர்க் காலத். தில் ஜீவித்திருந்ததற்குப் பலன் உண்டு. இல்லாவிட்டால் பேசாமல் பேனாவைத் துார எறிந்துவிட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மிலிடரிக்கு ஆள் சேர்க்கும் காரியால யத்தை நோக்கி நடந்து விடலாம்.

அந்தக் காலம் வேறு புத்தக உலகில்

நல்ல வயசாகித் தலை நரைத்துப்போய்க் குடுகுடு கிழவர்களாக உள்ளவர்களோடு நாம் பேசத் தொடங்கி, னால் அவர்கள் எத்தனையோ விஷயங்களை எடுத்துச் சொல்வார்கள். பழங்காலத்துக் கதைகளை அடுக்கடுக்காக நாம் கேளாமலே விரிவாகச் சொல்லிக்கொண்டே போவார். கள். பழைய ஞாபகங்களிலே ஒன்றிப்யோய் அவர்கள் பேசும் பொழுது அவர்களுக்கு இந்த உலக ஞாபகமே இராது. அவர்கள் தம் பேச்சை நிறுத்தியதும் ஒரு பெரு மூச்சு. . விடுவார்கள் பிறகு, ஹகும்! எல்லாம் அந்தக் காலம்! இப். போது எல்லாம் தலைகீழ்ப் பாடம்.முனைத்து மூணு இலை