பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் காலம் வேறு 41

விடுவதற்குள் கால் பூமியின்மேல் இருப்பதில்லை. காலம் கலிகாலம் அல்லவா?" என்று சொல்லுவார்கள். பழைய காலத்துப் பேச்சு எதுவாக இருந்தாலும் இந்தப் பல்லவியில் வந்துதான் முடியும். எதை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள், அந்தக் காலத்ததென்றால் அதன் மகிமையே வேறு என்பதுதான் அவர்கள் கருத்து. இந்தக் காலத்தில் இட்டிலி பண்ணுகிறார்களே, அது இட்டிலியா? அதில் உளுந்து வாசனை ஏதாவது இருக்கிறதா? அந்தக் காலத்தில் உளுந்துக்கு எத்தனை வாசன்ை? இட்லிதான் எவ்வளவு ருசி யாகவும் மெதுவாகவும் இருக்கும்?' என்று இட்டிலி புராணத்தை விரிப்பார்கள். என் தாத்தா, அந்தக் காலத் தில் எலக்ட்ரிக் விளக்கு உண்டா?' என்று யாராவது சிறு பையன் கேட்கட்டும். கிழவர் ஒரு பெரிய பிரசங்கத்தையே செய்ய ஆரம்பித்து விடுவார். 'எலக்ட்ரிக்விளக்கு எங்களுக்கு எதற்கு? நாங்கள் என்ன குருடர்களா? நிலா வெளிச்சத்தில் புத் தகம் படிப்போமே. குத்துவிளக்கில் விளக்கெண்ணையை விட்டுப்படித்தால் கண்ணுக்கு எவ்வளவு குளிர்ச்சி தெரியுமா; இப்போது எலக்ட்ரிக் விளக் குவந்துவிட்டது என்று ஜம்பம் அடிக்கிறீர்களே மூன்றாவது வயசிலேயே கண்ணாடி மாட் டிக்கொள்ளும் பிரபாவத்துக்குக் காரணம் அந்த மாயாஜால எலக்ட்ரிக் விளக்கென்ற சமாசாரம் உங்களுக்குத் தெரிய வில்லையே! ஹாம்! அந்தக் காலமே வேறு. இந்தக் காலம் மாதிரியா?' என்று கடல்மடை திறந்தாற்போல் அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் உள்ள வேற்றுமையை விமரிசனம் செய்ய முனைந்து விடுவார் தாத்தா.

தாத்தா சொல்வதில் உண்மை ஓரளவு இருக்கலாம்? இல்லாமலும் இருக்கலால். ஆனால் எந்த விஷயமானாலும் பழைய காலத்தது என்றால் உயர்ந்தது என்று அவர் சொல் வது, நிச்சயமாக உண்மையாகாது. அது அபிமானத்தால் வரும் பேச்சு அந்தக் காலத்திற்குப் பிறகு மனித ஜாதி எத்தனையோ துறைகளில் மு ன் ேன றி இருக்கிறது