பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் காலம் வேறு 45

ஆமிகவும் அருமையாகவே காணப்படும். கட்டுரைகளைத் திருப்பித் திருப்பி நீதி நூல்களிலுள்ள செய்யுட்களை மேற் கோள் காட்டி எழுதியிருப்பார்கள். நீளமான வாக்கியங் களும், கடல்புடை சூழ்ந்த நிலவுலகத்தில்', நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்பன போன்ற தொடர்களும் நிரம்பியிருக்கும். கற்பு, பொறாமை, நல் லொழுக்கம், கூடா நட்பு என்பனபோலத் திருக்குறளிலும் நாலடியாரிலும் வரும் அதிகாரத் தலைப்புக்களையே கட்டுரைகளின் பெயர்களாகக் காண முடியுமே அன்றி அவற்றில் புதுமை இராது.

விஞ்ஞானம், சரித்திரம், பூகோளம் முதலிய துறை களில் தமிழில் புஸ்தகங்கள் அக்காலத்தில் வெளிவரவில்லை. சிறிய வகுப்புக்களுக்கும் பயன்படும்படி சில புத்தகங்கள் வந் தனவே ஒழிய அறிவைப் போதிக்கும் உருப்படியான புத்த கங்கள் இல்லை. இக்காலத்திலோ எல்லாவற்றையும் தாய்ப் பாஷை மூலமாகப் போதிக்க வேண்டும் என்ற கிளர்ச்சி பல மாக இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் பாடமாக வைக்கும் படியாக விஞ்ஞானம் முதலிய பகுதிகளை விரித்துரைக்கும் புத்தகங்கள் பல வந்துவிட்டன. முன்பு இரண்டாம் பாரத்தி லேயே எல்லாம் இங்கிலீஷில் ஆரம்பமாகிவிடும். இப் போதோ ஹைஸ்கூல் பாடங்களெல்லாம் தமிழில் சொல்லித் தருகிறார்கள். காலேஜ் வகுப்புகளிலும் தமிழில் கற்றுக் கொடுப்பதற்குத் தக்கபடி புத்தகங்கள் வெளிவந்து கொண் டிருக்கின்றன. விஞ்ஞானம்முதலிய கலைத்துறைகளில் வழங் கும் ஆங்கிலச் சொற்களுக்குறிய தமிழ்ச் சொற்களைத் தேர்ந்து தொகுத்திருக்கிறார்கள். இந் த க் க ைல ச் சொல்லாக்கம் புதிய புத் த கங்க ள் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கிறது. .

அக்காலத்தில் நாவல்கள் பல இருந்தன. பள்ளிக்கூடத் துக்கு வெளியே அதிகமாகப் படிக்கப் பெற்ற வசன புத்தகம் காவல்தான். நூறு நூற்றைம்பது பக்கம் உள்ள நாவல்