பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கி. வா. ஜ. பேசுகிறார்.

களல்ல; பெரும்பாலும் முந்நூறு நானுாறு பங்கங்கள் அடங்கிய நாவல்கள். எல்லாம் ஆங்கிலத்தில் உள்ள சாமான்ய நாவல்களைத் தழுவியவை. தழுவியதென்றால் இந்திய நாட்டுப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது அல்ல; ஊர்ப் பெயர்களும், மனிதர்களின் Qւյլյrr களும் மாறியிருக்கும்; அவ்வளவுதான். ரெயினால்ட்ஸ் நாவல்களும், ஆறுபென்னி நாவல்களும் இப்படி உருமாறித். தமிழில் வந்ததற்குக் கணக்கு வழக்கில்லை. தன சிங்கம் பிரபுவும், அமராவதி சீமாட்டியும் கதையில் உலவுவார்கள். பெயர்தான் இந்த நாட்டினர் பெயரைப் போல் இருக்கும். ஆனும் பெண்ணும் கூடிக் குலவுவதும், திருடர்கள் தந்திர சாமர்த்தியங்கள் செய்து பிரபுக்களை ஏமாற்றுவதும்: பிறவும் அப்படியே ஆங்கிலத்திலிருந்து இறக்குமதியான சரக்குகள். நடு நடுவே, பார்த்தீர்களா மேல்நாட்டு நாகரீகக் கோலத்தை' என்று ஆசிரியர் நமக்கு அது மேல் நாட்டுக் கதை என்பதை மறந்து விடாமல் நினைப் பூட்டுவார்.

துப்பறியும் நாவல்களுக்கு அந்தக் காலத்தில் அபார மான மதிப்பு. பள்ளிக்கூடப் பிள்ளைகள் துப்பறியும் நாவல் களை உத்லாகமாகப் படிப்பார்கள். அக்காலத்துப்பெரியவர் கள், சிறுபிள்ளைகள் துப்பறியும் நாவல் படித்தால் கெட்டும் போய் விடுவார்கள் என்று சொல்வி வந்தார்கள். அவர்கள் தடுக்கத் தடுக்க நாவல்கள் அதிகமாக உலவினவே ஒழியக் குறையவே இல்லை. .

ப ைழ ய சம்பிரதாயங்களையும் கிராமவாசத்தின் இயல்புகளையும் விளக்கும் நாவல்கள் ஒன்றிரண்டே வெளிவந்தன. கமலாம்பாள் சரித்திரம், பிரதாப முதலியார். சரித்திரம், பத்மாவதி சரித்திரம் என்பன போன்ற நாவல் கள் அதிகம் இல்லை. அந்த மூன்று நாவல்களுக்கும் சரித்திரம் என்று பெயர் வைத்தது வேடிக்கையாகத்