பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் காலம் வேறு 4ፖ?

தோன்றுகிறதல்லவா? அந்தக் காலத்தின் ஒதம் அவைகளை யும் விடவில்லை.

தழுவலும் அல்லாமல் சொந்தமும் அல்லாமல் சில நாவல்கள் எழுந்தன. கதை கடைசியில் கொட்டு மேளத். துடன் முடிவாக வேண்டுமென்பதை ஒரு நியதியாகவே நாவல் ஆசிரியர்கள் வைத்துக்கொண்டிருந்தார்கள். இடை யிடையே ஆசிரியர் பிரசங்க மேடையைப் போட்டுக், கொண்டு வாசகர்களுக்குக் கற்பைப்பற்றியோ தேசாடனத். தைப்பற்றியோ உபதேசம் செய்யத் தொடங்குவார். மேற்கோட் செய்யுட்கள் இடையிடையே வந்து விழும்.

- இக்காலத்தில் நாவல்களின் விஷயத்தில் நாம் முன்னேற்.

றம் அடைந்து விடவில்லை. ஆனால் நல்ல நாவல் எப்படி இருக்க வேண்டுமென்ற அறிவு தமக்கு வந்திருக்கிறது. துப் பறியும் நாவல்களுக்குப் பதிலாக ஹிந்தி நாவல்களும், வங்காளி நாவல்களும் தமிழ்ப் புத்தக சாலைகளை நிரப்பி யிருக்கின்றன. எழுத்தாளர்களுடைய உள்ளத்தில் தமிழிலே சொந்தமாக நாவல்கள் எழுத வேண்டுமென்ற உணர்ச்சி தோன்றியிருக்கிறது. சிலர் முயற்சியும் செய்து வருகிறார். கள். நாளடைவில் நல்ல நாவல்கள் தமிழில் உண்டாகும் என்ற நம்பிக்கைக்கு இடம் உண்டு.

சிறுகதைகள் என்ற பேச்சை எடுத்தாலே தமிழ்நாட்டார். பெருமைப்பட வேண்டியவர்களென்று சொல்லத் தோன்று. கிறது. உலகம் முழுவதுமே பெரிய நாவல்களைக் காட்டி, லும் சிறு கதைகளுக்கு மதிப்புத் தரும் நிலை வந்திருக்கிறது. நீண்ட கதைகளை வாசிக்கச் சோம்பலோ, அல்லது இக். காலத்தவருடைய வேகத்திற்கு நெடுங்கதைகள் ஒத்துவர வில்லையோ என்னவோ சிறு கதைகள் கணக்கு வழக்கில்லா மல் எல்லாப் பாஷைகளிலும் குவிகின்றன.

அந்தக் காலத்தில் சிறுகதை என்ற ஒர் இலக்கிய வகை: இருப்பதே தமிழ் நாட்டாருக்குத் தெரியாது. பாட்டி சொல். லும் கதையும், நீதியை உபதேசிக்கும் கதையுமே அளவி: