பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-荃& கி. வா. ஜ. பேசுகிறார்

னால் சுருங்கிய கதைகளாக இருந்தன. சிறு கதைகளை அப் பொழுதே உலகத்தில் பலவேறு பாஷைகளிலும் எழுத ஆரம் -பித்து விட்டார்கள். வ. வே. சு. ஐயரும், பாரதியாரும், மாதவையாவும் அந்தத் துறையை முதல் முதலில் தமிழில் கொண்டு வந்தார்கள். அதனுடைய அருமையை அன்று ஒருவரும் உணரவில்லை. -

வரவரத் தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிறு கதைப் பித்துப் பிடித்துவிட்டது. பத்திரிகைகளில் எல்லாம் சிறு கதைகளை எழுதித் தள்ளினார்கள். அவற்றை தொகுத்துப் புத்தகமாக .ெ வ எளி யி ட் டா ர் க ள். இன்று தமிழில் எத்தனையோ விதமான சிறு கதைத் தொகுதிகள் வந்திருக் கின்றன. ஒருவரே எழுதிய கதைகள் அடங்கிய தொகுதிகள் பல; பலர் எழுதிய கதைகளின் தொகுதிகள் சில. இக்காலத் தில் தமிழ் எழுத்தாளன் என்று ஒருவன் பெயரெடுக்க வேண்டுமானால் அவன் முதலில் சில சிறு கதைகளை எழுத வேண்டும். பிறகு அவன் எதையாவது எழுதிக்கொள்ளட்டும், சிறுகதை எழுதுபவனைத்தான் ஜனங்கள் கவனிக்கிறார்கள். முன் காலத்தில் அரசியல் சம்பந்தமான புஸ்தகங்கள் இல்லை; பிறநாட்டுச் சரித்திரங்கள் இல்லை; நம் நாட்டுச் சரித்திரங்களும் தமிழில் இல்லை. இப்பொழுதோ ஒவ்வொரு வகையிலும் பல புத்தகங்கள் வந்துவிட்டன. -

  • சிறுகதை எப்படி நன்றாகத் தமிழ் நாட்டில் வளர்ந்திருக் கிறதோ அப்படி அதற்குச் சமானமாக வளர்ந்தது ஒன்று உண்டென்றால் அது பத்திரிகை, தினசரிப் பத்திரிகைகள், வாரப் பத்திரிகைகள், பட்சப்பத்திரிகைகள், மாதப் பத்திரி கைகள் என்ற பலவகைப் பத்திரிகைகளை இன்று தமிழ் நாட்டில் பார்க்கிறோம்.அக்காலத்தில் ஒரு தினப் பத்திரிகை :யும் ஒன்றிரண்டு வாரப் பத்திரிகையும் அப்படியே ஒன் றிரண்டு மாதப் பத்திரிகைகளும் இருந்தன. சமாசாரப் பத்திரிகைகளில் பாதி ஆங்கிலம் கலந்த நடையைத்தான் காணலாம். தமிழில் தலைப்புப் போடுவதோடு ஆங்கிலத்தி