பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் காலம் வேறு . 49*

திலும் போடுவது அந்தக் காலத்துச் சம்பிரதாயம். பாரதி: யார் இந்தியா என்ற வார ப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில்கூடத் தமிழ்த் த ைலப் பும் இங்கிலீஷ், தலைப்பும் அவர் போட்டு வந்தார். -

மாதப் பத்திரிகைகள், கற்பையும், பொறுமையின் சிறப் பையும் போதித்தன. இந்த உலகத்து விஷயங்களை விட்டு விட்டுப் பரலோகத்து விஷயங்களை வேதாந்தமென்ற பெயரைச் சொல்லிக்கொண்டு வெளியிட்டன.

இப்பொழுது தமிழ்ப் பத்திரிகைகளில் விநோதத்தை, உண்டாக்குவதற்கும் எத்தனையோ விஷயங்கள் வருகின்றன. பத்திரிகைகளில் வராத விஷயம் ஒன்றும் இல்லை. சுடச்சுடச் செய்திகளையும் விஷயங்களையும் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதில் பத்திரிகைக்காரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர்.

பொதுவாக, இந்தக் காலத்துப் புத்தகங்களிலும், பத்தி. ரிகைகளிலும் வாசகருடைய கவனத்தை எடுத்தவுடன் இழுப்பதற்கு வேண்டிய தந்திரங்களை ஆள்கிறார்கள். எந்த விஷயத்தையும் சுலபமாகக் கதைபோலச் சிரமம் தோன்றாமல் சொல்ல வேண்டும் என்ற நினைவு ஒவ்வோர். எழுத்தாளனுக்கும் இருக்கிறது. சொல்கின்றவிஷயம் ஆழ்ந்த, தாகவும் புஷ்டியாகவும் இருக்க வேண்டும். சொல்வதில் பெரும்பாலும் வாசகருக்குப் புரிய வேண்டும் என்பதே. இக்காலத்து எழுத்தாளனது நோக்கம். .

புத்தகத்தின் உருவ அழகைப் பற்றிச் சொல்லப் போனால் அடே அப்பா அந்தக் காலம் எங்கே, இந்தக் காலம் எங்கே மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் என்று சொல்லலாமா? மண்ணாங்கட்டிக்கும் பொன்னா பரணத்துக்கும் உள்ள வித்தியாசம் என்று சொல்லலாமா? இன்னுங்கூட அதிகமாகச் சொல்லலாம்.

நல்ல காகிதம், தெளிவான அச்சு, வாங்கு வாங்கு என்று: