பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 50 கி. வா. ஜ. பேசுகிறார்

தூண்டும் அட்டை, அழகான பைண்டு ஆகியவை இக்காலத் துப் புத்தகத்தின் லட்சணங்கள். அந்தக் காலத்தில் வெள்ளைக் காகிதத்தைக் கறுப்பாக்கினார்கள்; கந்தைத் துணியைத் தைக்கும் நூலால் அந்தக் காகிதத்தைத் தைத்தார்கள்; அதற்கு மேலே அட்டையென்று ஒரு வஸ்துவைப் பூட்டினார்கள். தமிழ்ப் புஸ்தகங்களுக்கெனவே ஏற்பட்ட சிருஷ்டி மார்பிள் காகிதம். அதைப் போர்த்துக் கொண்டு கடைவீதியில் உலவப் புறப்படும் அந்தக் காலத் துத் தமிழ்ப் புத்தகத்தை இன்றைத் தமிழ் நாட்-ார்

தொடக்கூட அருவருப்பு அடைவார்கள் .

வர்ணங்களும் சித்திரங்களும் பத்திரிகைகளின் அட்டை களையும் புத்தகத்தின் புறத்தையும் மெருகிட்டுப் பொலிவு றுத்திக் கண்ணைக் கவர்கின்றன. விலையை யார் கவனிக்கி றார்கள்? புத்தக உருவ அமைப்பு (Getup) சரியானபடி அமைந்து விட்டால் உள்ளே விஷயம் இரண்டாம் பட்சமாக இருந்தாலும் குற்றமில்லை, விற்பனையாகிவிடும் என்பது இன்றைய புத்தக வியாபாரிக்கு நன்றாகத் தெரியும்.

அந்தக் காலத்தில் இந்த வர்ண விசித்திரம் உண்டா? கதைபோல விஷயத்தைச் சொல்லும் தோரணை உண்டா? விஷய விரிவு உண்டா?-நீங்களே சொல்லுங்கள். அந்தக் காலம் வேறுதான்; இந்தக் காலம் வேறுதான்.

கலையும் தொழிலும்

அழகிய சோலையில் நெடு மரம் ஒன்று பூத்துக் காய்த்துக் கனிந்து நிற்கிறது. மலரின் மணம் எங்கும் பரந்து இன்பத்தைத் தருகிறது.நெடுந் தூரத்திலிருந்து வருவாரைத் .தன்பால் இழுக்கும் கவர்ச்சி அந்த மரத்திற்கு இருக்கிறது.