பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் தொழிலும் 51.

மரத்தின் கிளைகள் வேர்கள் எல்லாம் நன்றாக வளர்ந் திருக்கின்றன. ஆழ்ந்து சென்ற வேரும் படர்ந்து சென்ற கிளைகளும் மரத்தின் வளர்ச்சியை அளவிட்டுரைக்கின்றன. அந்த மரத்திற்குப் பெருமை வேரினாலும் கிளைகளாலும் வந்ததா? மலரினால் வந்ததா? -

மரத்திற்குப் பெருமை சந்தேகமில்லாமல் மலரினால் உண்டாவதுதான். வேரும் கிளையும் மலருக்கு ஆதாரமாக இருந்தாலும் அவற்றின் சமுதாயத்துக்கே புகழை வருவிப் பது மலரே. ஆனால் அந்த மலரின் மணமும் பொலிவும் எப்படி வந்தன? வேரின் செம்மையாலும் கிளையின் வளப் பத்தாலும் மலர் ம க ர்கிறது; மனக்கிறது.

தொழிலுக்கும் கலைக்கும் வேரையும் மலரையும் உபமானமாகச் சொல்லலாம். ஒரு நாட்டின் பெருமைக்குக் காரணமாக இருப்பது அந்நாட்டின் கலைச் செல்வந்தான். எத்தனையோ ஆண்டுகளாகப் பண்பட்டு வந்த சமுதாயத் திலேதான் கலை மலர்ச்சி உண்டாகும். உடல் வளப்பம். மாத்திரம் கலைக்குப் போதாது. உள்ளத்தின் வளப்பமும் வேண்டும்; உயிர் வளப்பமும் வேண்டும். காவியமும் ஒவிய மும், சிற்பமும் இன்னிசையும் ஆகிய கவின் கலைகள் பண் பட்ட உள்ளத்திலிருந்து பிறப்பவை; பண்பட்ட சமுதாயத் திலே படர்பவை; பண்பட்ட நாட்டிலே கால் கொள்பவை. - ஒரு நாட்டில் கலைமலர்ச்சி வரவேண்டுமானால் அங்கே முதலில் தொழில் வளர்ச்சி மலிய வேண்டும். வேர் ஊன்றிக் கிளை பரந்து தழை மலிந்து பிறகு மலர் தோன்றுவது போலே தொழில் வன்மை மிக மிகக் கலையின் மலர்ச்சிக்கு வாய்ப்பு உண்டாகும். ஆயிரம் தொழிலாளர்கள் கூடிய சமுதாயத்தில், அவருடைய தொழில் முயற்சியால் உண் டான் வலிமையைப் பெற்ற நிலத்தில், ஒரு கலைஞன் பிறப்பான். ஆதலின் தொழிலாளர்கள் நாட்டுக்கு வேரைப் போன்றவர்கள்; க வி ன் க ைல ளு ர் க ள் மலரைப் போன்றவர்கள். - .