பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛含 - கி. வா. ஜ. பேசுகிறார்.

நாட்டில் தொழில் பல்க வேண்டும். பலவகைத் தொழில் களும் சிறக்க வேண்டும். வெறுந் தொழில்களே மலிந்தால் மனிதன் வாழ்விலே சுவை இராது. அவன் யந்திரமாகி விடு வான். கலையும் வேண்டும். கலையினால் தான் மனித சாதி, இம்மையிலே இன்பம் காண முடியும். நித்தியமான அழகைத் தருவது கலை. தொழிலால் உரம் ஏறுகிறது; கலையால் அந்த உரத்திற்கு மெருகு ஏறுகிறது. தொழில் செல்வத்தைத் தரும்; கலை இன்பத்தைத் தரும்; தொழில் ஊக்கத்தைத் தரும்; கலை அமைதியைப் பாய்ச்சும்.

தொழிலும் கலையும் வளர வேண்டுமென்பதே தம். நாட்டினர் குறிக்கோள். அம்மி பொளியும் கல் தச்சன் வீட்டில் வி க் கி ர க ம் அமைக்கும் சிற்பி பிறக்கிறான். பாரதியார் தொழிலும் கலையும் ஒருங்கே வளர வேண்டும், என்று சொல்கிறார். -

காவியம் செய்வோம்-நல்ல

காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம்-கொல்லர்

உலை வளர்ப்போம் ஒவியம் செய்வோம்-நல்ல

ஊசிகள் செய்வோம் உலகத் தொழில் அனைத்தும்

உவந்து செய்வோம் ! தொழிலுக்கும் கலைக்கும் தெய்வமாகிய கலைமகளை இந்த நாட்டில் நவராத்திரியில் கொண்டாடுகிறார்கள். சரஸ்வதி பூஜையன்று க ைல ளு ர் க ள் கலைமகளை வழிபடுகிறார்கள். அடுத்த நாளை ஆயுத பூஜையென்று. தொழிலாளிகள் கொண்டாடுகிறார்கள். இதை நினைத்தே பாரதியார்,

கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்

கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம்