பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வசன நடை § 3.

என்று வெள்ளைத் தாமரைப் பூவில் இருக்கும் வாணியைப் பாடுகின்றார். தொழில்’ என்னும் பாட்டில் இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே என்பது முதலாகப் பலபல தொழில் களைச் செய்யும்படி ஊக்குகிறார்.

அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயி ரந்தொழில் செய்திடு வீரே! என்கிறார். பல தொழில்களையும் சொல்லிவிட்டுக் கடைசியில் கலைக்கு வருகிறார் :

பாட்டுஞ் செய்யுளும் கோத்திடு வீரே பரத நாட்டியக் கூத்திடு வீரே. தொழில் நிரம்பியும் கலை நிரம்பாவிடில் மலர் இல்லாத மரம் போல நாடு இருக்கும். ஆதலின் தொழிலின் பயனும் கலையின் இன்பமும் ஒருங்கே கிடைக்கும் வண்ணம் கலைமகளை வேண்டுவதே நவராத்திரி வணக்கம் ஆகும்.

தமிழ் வசன நடை

"தமிழில் அந்தக் காலத்தில் வசன நடை உண்டா?”

இந்தக் கேள்வியை என் நண்பர் கேட்கிறார். அவர் இப்படிக் கேட்பதைவிட, 'தமிழர்கள் அந்தக் காலத்தில் பேசினார்களா?' என்று கேட்கலாம்; அல்லது, 'தமிழt களுக்கு வாய் இருந்ததா?’ என்றுகூடக் கேட்டிருக்கலாம்.

அதென்ன. அப்படிச் சொல்கிறீர்கள்? தமிழர்கள்

பேசுவதற்கும் தமிழ் வசன நடைக்கும் என்ன சம்பந்தம்' என்று அந்த நண்பர் என்னோடு வாதிக்க வரலாம். வரட் டுமே; தமிழருக்கு வாயிருந்தால் பேச்சு உண்டு; பேச்சிருத் தால் வசன நடை உண்டு" என்று காரணகாரியத் தொடர்பு படுத்திப் பதில் சொல்கிறேன்.

கி-4