பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54。 கி. வா. ஜ. பேசுகிறார்

மனிதன் தன்னுடைய உள்ளக் கருத்துக்களை வெளியிடு வதற்கு மொழியைக் கண்டுபிடித்தான். காக்கை குருவி முதலிய பறவைகளும், ஆடு மாடு முதலிய விலங்குகளும் தங்களுடைய கருத்தை ஒரளவுதான் தம்முடைய குரலால் தெரிவித்துக்கொள்ளுகின்றன. மனிதன் அந்தக் குரலை விசப்படுத்தி அதிலே பலபல கட்டுப்பாடுகளையும் விசித் திரங்களையும் அமைத்துப் பாஷையாகச் செய்து கொண் டான். தன் தேவைக்கு ஏற்றபடி வார்த்தைகளை உண்டாக்கி, அவற்றால் மயக்கம் உண்டாகாதபடி கட்டுப் பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டான். ஒரு பொருளுக்கு முதல் முதலில் கல்' என்று பெயர் வைத்து வழங்கத் தொடங்கினால், அதே பெயரை அவன் எப்போதும் சொல்லிப் பழகினான்; பிறரையும் சொல்லச் செய்தான். இந்த வரையறையினால் பேச்சு வழக்கம் ஒரு கூட்டத்தாருக் குள் பொதுவாகி அதுவே மொழியும் ஆயிற்று.

நாளடைவில் எழுத்துப் பழக்கம் மனித சமுதாயத்தில் தோன்றியது பேசுவதை எழுத முதலில் பழகினான். பேசிப் பேசிச் செம்மையாகி ஒர் உருவத்தை அடைந்த மொழி அப் போது எழுத்துருவத்தையும் பெற்றது. அந்த ஆரம்ப காலத்தில் மனிதன் கவிதையையா எழுதியிருப்பான்? பேசு வதைத்தான், உரைக்கும் நடையைத்தான், எழுதினான்.

ஆகவே, முதலில் எழுத்தில் வந்தது வசனந்தான். தமிழர் மிகப் பழைய சாதியினர்; அவர்களுடைய மொழி பழமையானது. எழுத்துருவம் பெற்று எவ்வளவோ காலத் துக்குப்பின் இலக்கியங்களும் இலக்கணங்களும் ஒரு மொழி யில் உண்டர்கின்றன. தமிழில் அப்படி உண்டான இலக்கிய - இலக்கணங்கள் கொள்ளையோ கொள்ளை . - தமிழ்மொழியும் உலக வளர்ச்சியோடு வளர்ந்து வந்த தேயாகையால் இதில் வசன நடை, எழுத்தில், இலக்கிய உருவத்தில் வந்திருப்பது இயல்பே. அகிருஷ்டவசத்தால்