பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வசன நடை 55.

கடல் நீருக்கும் கறையானுக்கும் இரையாகாமல் பிழைத்து, நிற்கும் பழைய தமிழ் நூல் ஒன்று இப்போது நமக்குக் கிடைக்கிறது. 'தொல்காப்பியம்' என்ற இலக்கண நூலைத் தான் சொல்கிறேன். அதிலுள்ள இலக்கண வகைகளையும், ஒழுங்கான அமைப்புகளையும் பார்த்தால் த மி ழ ர் எவ்வளவோ காலமாகப் பாஷையைப் பண்படுத்திக் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.

அந்தப் பழைய இலக்கண நூலுக்கு ஆராய்ச்சிக்காரர்க ளெல்லாம் இன்னும் ஜாதகம் கணித்துக்கொண்டிருக்கிறார் கள். அது பிறந்த மேனிக்கு இல்லை; என்ன என்னவோ புதிய சரக்குகளைப் பின்னாலே வந்தவர்கள் அதில் சேர்த்தி ருக்கிறார்கள்' என்று சிலர் சொல்லுகிறார்கள். அதிலே இருக்கும் ஒவ்வொரு சூத்திரமும் தமிழர் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது. பொருளதிகாரம் முழுவதும் தமிழர் வீட்டுச் சரித்திரமும் நாட்டுச் சரித்திரமும் கலந்தது' என்று சிலர் சொல்லுகிறார்கள். இந்தச் சண்டை எப்படி யாவது போகட்டும். அது மிகப் பழமையான நூல் என்பதில் ஒருவருக்கும் ஒரு தடையும் இல்லை. கடைச்சங்க காலத்தை இரண்டாயிரம் வருஷங்களுக்கு முற்பட்டதென்று உத்தேச மாகச் சொல்கிறார்கள். அதற்கு முந்திய தொல்காப்பியத் தின் காலம், மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பென்று அந்த உத்தேசத்தின் சார்பிலே சொல்லி விடலாம்.

ஒரு பொருள் இருந்தால்தான் அதைப்பற்றிய ஆராய்ச்சி யும் எழும். இலக்கியம் இருந்தால்தான் அதிலுள்ள பண்பை இலக்கணமாக வகுக்கலாம். தொல்காப்பியத்தில் உள்ள இலக்கணக் கருத்துக்கள் அதற்கு முன்பு தமிழ் நாட்டில் வழங்கி வந்த இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு எழுந் தன. ஆகையால் தொல்காப்பியத்தில் ஒருவகையான நூலைப்பற்றிய பிரஸ்தாபம் வந்தால் அத்தகைய நூல்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னே வழங்கி வந்ததென்று