பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎼᏮ கி. வா. ஜ. பேசுகிறார்

ஊகித்துக் கொள்ளலாம்; ஏன்? நிச்சயமாகவே சொல்லி விடலாம். .

叉 X X

இலக்கணம் செய்பவர்கள் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரண்டையும் ஆகாரமாகக் கொண்டு இலக் கணங்களைத் தொகுப்பார்கள். தொல்காப்பியரும் அப்படித். தான் தொல்காப்பியத்தை இயற்றினார். தமக்கு முன்பு இருந்த இலக்கணங்களையும் ஆராய்ந்தார். உலகத்தில் வழங்கும் உயிருள்ள பாஷையாகிய வசனத்தையும் ஆராய்ந் தார். ஆம்! சான்றோர்-கல்வியறிவிற் சிறந்தோர்-எப்படிப் பேசுவார்களோ அதுதான் வசன நடை, அதையே வழக் கென்று சோல்கிறார்கள். அந்த வழக்கையும் ஆராய்ச்சி பண்ணினார். தொல்காப்பியத்தைப் பாராட்டிச் சிறப்பும் பாயிரம் இயற்றிய புலவர் சொல்வதைப் பார்க்கலாம் :

தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி.” இங்கே சொல்லப்பெறும் வழக்கிலே வசனப்போக்கும். சேரும். .

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்று மூன்று பகுதியாகத் தோல்காப்பியர் தம் நூலைப் பிரித்து அமைத்திருக்கிறார். எழுத்ததிகாரத்திலும், சொல் லதிகாரத்திலும் இந்த வழக்கைப்பற்றிய செய்திகள் பல இடையிடையே வருகின்றன. ஆயினும் பொருளதிகாரத் தில்தான் உரைநடை நூல்கள் பலபல துறையில் அமைந்: திருந்தன என்பதைத் தெரிவிக்கும் ஆதாரம் இருக்கிறது.

இலக்கிய இலக்கணங்களின் பாகுபாட்டைத் தொல் காப்பியர் ஒரிடத்தில் சொல்கிறார். இலக்கணம், உரைநடை புதிர், பழமொழி, மந்திரம், குறிப்பு என அடிவரையறையில்